இது என்னம்மா பேரு?!..கிண்டலடித்த எம்.ஆர்.ராதா!.. ஆனால் டாப் ரேஞ்சிக்கு போன நடிகை...
எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‘இரத்தக்கண்ணீர்’ திரைப்படம் தான் எம்.ஆர். ராதாவிற்கு ஒரு அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் இன்றளவும் நம் கண்முன் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. மேலும் மிமிக்ரி செய்யும் இளைஞர்களில் எம்.ராதாவின் பாதிப்பு இல்லாமல் இருக்காது.
அந்த அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நம்ம நடிகவேள். புரட்சிக்கரமான கருத்துக்களை தன் படங்களின் மூலம் வெளிப்படுத்துபவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர்.அதனால் அதற்கு எதிரான கருத்துக்களை நகைச்சுவை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியவர்.
அந்த வகையில் இவர் நடித்த ஒரு படத்தில் நடிக்க வந்த நடிகையின் பெயரை கேட்டுவிட்டு சினிமாவிற்கான பெயரா இது ? என்று கேட்டாராம். அது வேற யாருமில்லை. நடிகை கே.ஆர்.விஜயா. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த மகளே உன் சமத்து படத்தில் கே.ஆர்.விஜயா ஒரு சின்ன ரோலில் நடிக்க வந்திருக்கிறார். அந்த படத்தில் எம்.ஆர்.ராதாவும் நடித்திருக்கிறார்.
கே.ஆர்.விஜயாவை பார்த்து ஏம்மா உன் பேரு என்ன? என கேட்டாராம். அதற்கு அவர் தெய்வ நாயகி என்று சொன்னாராம். உடனே இவர் தெய்வநாயகியா? சினிமாவில் நடிக்க வந்துட்டு அதென்ன தெய்வ நாயகி? இனிமேல் உன் பேரு விஜயா என்று மாற்றிக் கொள் என்று கூறினாராம்.
அதிலிருந்தே அவர் பெயர் கே.ஆர். விஜயா என்று மாறியதாம். மேலும் அந்த படத்தில் ஆனந்தன் ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஹீரோயினாக ராஜ்ஸ்ரீ நடித்திருப்பார். முதலில் நடிக்க வந்த சமயம் கிடைத்த ரோல்களில் நடித்து வந்த கே.ஆர்.விஜயா பின்னாளில் புன்னகையரசியாக ஜொலித்த கதை யாவரும் அறிந்த ஒன்றே.