என்னது ஒரு பொண்ண தொட்டா ஒரு வீடா? மாமன்னனாக வாழ்ந்த எம்.ஆர்.ராதா
தமிழ் சினிமாவில் ஒரு லட்சிய நடிகராகவே வாழ்ந்து மறைந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. பார்ப்பதற்கு பயங்கரமாகவும் பேசுவதில் கொஞ்சம் கரடுமுரடான குரலிலும் பேசி அனைவரையும் பயப்பட வைத்தவர். படங்களில் சிந்தனை கருத்துக்களை தாராளமாக அள்ளி வீசியவர்.
பெரியார் கருத்துக்களை தன் மூச்சாகக் கொண்டவர். அதனாலேயே சமூகத்தில் முடங்கிக் கிடக்கும் அழுக்குளை தன் வசனங்களின் மூலம் நகைச்சுவையாக வெளிக் கொணர்ந்தார். அவர் நடித்த படங்களிலேயே இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத படமாக அமைவது இரத்தக்கண்ணீர் திரைப்படம்தான்.
அதுவும் எம்.ஆர்.ராதா என்று சொன்னாலே ரத்தக்கண்ணீர் திரைப்படம் தான் நியாபகத்திற்கு வரும். முதன் முதலில் மறுமணம் என்ற ஒன்றை தன் படத்தின் மூலம் கொண்டுவந்தார் எம்.ஆர்.ராதா. பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் தான் என்று பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் சொல்லி கேட்டிருக்கிறோம்.
இதையும் படிங்க : மறைந்தும் வாழும் தெய்வம் எம்ஜிஆர்! இக்கட்டான சூழலில் இருந்த விஜயகுமாரிக்கு சின்னவர் செய்த பேருதவி
மேலும் என் அப்பாவுக்கு இத்தனை மனைவிகள் என்று ராதாரவி சொல்லியே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் முதன் முறையாக எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணைத் தொட்டாலே ஒரு வீடு நிச்சயம் என்று சொல்வதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். அதுவும் பிரபல புரடக்ஷன் மேனேஜராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா தான் கூறியிருக்கிறார்.
மேலும் கூறிய அவர் ‘பார்ப்பதற்கு என்னவோ எம்.ஆர்.ராதா கரடுமுரடான ஆளாக தெரிந்தாலும் மிகவும் நல்ல மனிதர், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர்’ என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட மனைவிகள் என்றும் கூறியிருக்கிறார். ராதிகாவின் அம்மாவான கீதா சிலோனில் இருந்து வந்து எம்.ஆர்.ராதாவின் நாடகத்தில் சேர்ந்தவராம்.
அவரை அப்படியே தன்னுடன் வைத்துக் கொண்டாராம் எம்.ஆர்.ராதா. அதுமட்டுமில்லாமல் எந்த பெண்ணை தொட்டாலும் அந்த பெண்ணுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்து விடுவாராம். கூடவே 25 பவுன் நகையும் வாங்கிக் கொடுத்து விடுவாராம் எம்.ஆர்.ராதா. ஆனால் அவர்களை எல்லாம் மிகவும் மரியாதையாக நடத்தினாராம்.
இதையும் படிங்க : செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்துக்கு கஸ்தூரிராஜா காரணமா?.. இது என்னடா புதுசா இருக்கு!…