இந்த படம் கண்டிப்பா ஃப்ளாப்தான்- அன்றே கணித்த எம்.ஆர்.ராதா… என்ன நடந்தது தெரியுமா?

by Arun Prasad |   ( Updated:2023-04-05 06:50:51  )
MR Radha
X

MR Radha

நடிகவேல் என்று புகழ்பெற்ற எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்து வந்தவர். இவர் நடித்த “ரத்தக்கண்ணீர்” திரைப்படம் இப்போதும் மிகப் பிரபலமான திரைப்படமாக பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் நடிக்க இருந்த ஒரு திரைப்படத்தின் வெற்றியை குறித்து முன்னமே கணித்துள்ளார் எம்.ஆர்.ராதா. இந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

1965 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, ஏவிஎம் ராஜன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “எங்க வீட்டுப் பெண்”. இத்திரைப்படத்தை தபி சாணக்யா என்பவர் இயக்கியிருந்தார். விஜயா புரொடக்சன்ஸ் நாகி ரெட்டி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அன்றே கணித்த எம்.ஆர்.ராதா

இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு தயாரிப்பு நிறுவனத்தார் எம்.ஆர்.ராதாவை இத்திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக அணுகினர். அப்போது இத்திரைப்படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனத்தார் எம்.ஆர்.ராதாவிடம் கூறினார்கள். ஆனால் அந்த கதை எம்.ஆர்.ராதாவுக்கு பிடிக்கவில்லை.

அப்போது தயாரிப்பு நிறுவனத்தார், “நீங்கள் நடித்தால்தான் இந்த படத்தை நாங்கள் எடுப்பதாக இருக்கிறோம். இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை எடுக்கவில்லை” என கூறியிருக்கிறார்கள். அதற்கு எம்.ஆர்.ராதா, “நீங்கள் தாராளமாக இந்த படத்தை எடுங்கள். நான் நிச்சயமாக நடிக்கிறேன். ஆனால் இந்த படத்தின் வெற்றியிலே எனக்கு சந்தேகம் இருக்கிறது” என்றார்.

எனினும் அத்திரைப்படத்தை படமாக்க முடிவு செய்தனர் படக்குழுவினர். ஆனால் எம்.ஆர்.ராதா கணித்ததுதான் பின்னாளில் நடந்தது. அத்திரைப்படம் வெளியான பின் படுதோல்வியடைந்தது.

Next Story