More
Categories: Cinema History Cinema News latest news

நாடகத்தை பார்த்து கூச்சலிட்ட ரசிகர்கள்!.. மறுநாள் வித்தியாசமான போஸ்டருடன் அனைவரையும் மிரளவைத்த நடிகவேள்..

சினிமாவிலும் சரி நாடக மேடையிலும் சரி கொடிகட்டி பறந்தவர் தான் நடிகவேள் எம்.ஆர்.ராதா. பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைப் பிடித்தவர். அதனாலேயே மிகுந்த பகுத்தறிவு சிந்தனையுடன் பேசுவதில் வல்லவர். இவரின் சில கொள்கைகள் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும் அது தான் சரி என்று யோசிக்க வைக்கும்.

mr radha

எதையும் முகத்திற்கு எதிராக பட்டென பேசுபவர் எம்.ஆர்.ராதா. யாருக்கும் அடங்காத கட்டுக்குள் வராத எம்.ஆர்.ராதாவின் பாவனைகளை கண்டு மற்ற நடிகர்களே பயப்படும் அளவிற்கு ஆளானார் எம்.ஆர்.ராதா. மேலும் அவரின் குரல் வளம் வேற கனீர் குரலில் இருக்கும். அதை கேட்டாலே நடுங்குகிற நடிகர்களும் இருந்துள்ளார்கள்.

Advertising
Advertising

இவரின் மறுமலர்ச்சி நாடக சபாவில் நாடகம் ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பதிலாக உணர்ச்சி மிகுந்த இனவுணர்ச்சி பாடல்களும், பெரியாரின் தொண்டுகள் பற்றிய படங்களும் தான் இடம்பெறும். கணவனே கண்கண்ட தெய்வம் என்ற கொள்கையை முற்றிலுமாக தன் ‘இரத்தக் கண்ணீர்’ படத்தின் மூலம் மாற்றினார்.

mr radha

நடிகராக குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என அனைத்துக் கதாபாத்திரங்களில் நடித்தாலும் அவரின் முழுமையான ஆளுமையின் தாக்கம் அவர் ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் பிரதிபலித்தது. அது தான் இன்று வரை அவரை நினைவு கூற காரணமாகவும் அமைந்திருக்கிறது.

அவர் தன்னுடைய ஒரு நாடகத்தின் மூலம் மிகவும் விமர்சிக்கப்பட்டார். அது தான் ‘ராமாயணம்’ நாடகம். அந்த நாடகத்தை ராமாயணத்தின் கதைக்கே பொருந்தாத வகையில் கேலிச்சித்திரமாக வடிவமைத்திருந்தார் எம்.ஆர்.ராதா. அதை பார்க்க வந்த ரசிகர்களும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்திருக்கின்றனர்.

mr radha

நாடகத்தை நடத்த விடாமல் தடுத்திருக்கின்றனர். அதை கவனித்துக் கொண்டிருந்த ராதா மறு நாள் ஒரு வித்தியாசமான போஸ்டரை அடித்து ஒட்டினார். அதாவது அந்த போஸ்டரில் ‘ நான் நடிக்கும் ராமாயணம் நாடகத்தை பற்றி பேசுபவர்கள் அந்த நாடகம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து நாடகத்தை பார்க்க வராதீர்கள், உங்கள் பணம் எனக்கு தேவையில்லை, உங்களுக்கு ஒருவித மனக்கசப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக வராதீர்கள், நான் சொல்வதை மீறியும் வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை’ என்று வித்தியாசமான முறையில் அந்த போஸ்டர் அச்சிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : எம்ஜிஆர் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த சிவாஜி!.. அதற்கு உதாரணமாக இருந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு..

இதன் மூலம் அவர் காசுக்கும் மயங்குகிற ஆள் இல்லை என்று தெரிகிறது. தனக்கு பட்ட சிந்தனையை நேரிடையாக மக்கள் முன் நிறுத்த விரும்புபவராக இருந்திருக்கிறார் ராதா. இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts