Cinema History
எம்.ஜி.ஆரை சுட்ட துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கா?!.. நீதிபதி கேட்ட பதில்!. எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..
நாடக உலகில் எம்.ஜி.ஆருக்கு சீனியர் எம்.ஆர்.ராதா. சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி நாடகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அதனால் எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர் எப்போதும் ‘அண்ணன்’ என்றே மரியாதையாக அழைப்பார். ராதாவும் ‘தம்பி ராமச்சந்திரா’ என பாசமாக அழைப்பார். படப்பிடிப்பு தளத்தில் கூட எம்.ஆர்.ராதாவின் சொல்லுக்கு கட்டுப்படுவார் எம்.ஜி.ஆர். இது பலருக்கும் தெரியாது.
எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் எம்.ஆர்.ராதா நடித்திருக்கிறார். தாழம்பூ, பாசம், பெரிய இடத்து பெண் என பல படங்களை உதாரணமாக சொல்ல முடியும். எம்.ஆர்.ராதா ஒரு சிறந்த நடிகர் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், ஒரு படப்பிரச்சனையில் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு பேசப்போன எம்.ஆர்.ராதா தனது துப்பாக்கியால் அவரை சுட்டார்.
யார் மீதாவது அதிக கோபம் வந்தால் அவரை தனது துப்பாக்கியால் சுட வேண்டும் என்றே நினைப்பார் ராதா. குண்டு எம்.ஜி.ஆரின் கழுத்தில் பாய்ந்தது. அதேபோல், எம்.ஆர்.ராதாவும் தன்னை சுட்டுக்கொண்டார். இதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையுமே மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார்.
சில வருடங்கள் சிறையிலும் இருந்தார் எம்.ஆர்.ராதா. இந்த சம்பவம் எம்.ஆர்.ராதா மீது ஒரு கரும்புள்ளியாகவே மாறியது. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அது வொர்க் அவுட் ஆகவில்லை. எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதா மீது கோபத்தை காட்டாமல் தனது வேலையை பார்க்க துவங்கினார்.
எம்.ஜி.ஆரை சுட்டபின் எம்.ஆர்.ராதா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அப்போது ‘எம்.ஜி.ஆரை சுட பயன்படுத்திய துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா?’ என ராதாவிடம் கேட்டார் நீதிபதி. யாராக இருந்தாலும். ஒன்று ‘இருக்கிறது’ என சொல்வார்கள். இல்லையெனில் ‘இல்லை’ என சொல்வார்கள். ஆனால், எம்.ஆர்.ராதா என்ன பதில் சொன்னார் தெரியுமா?…
அந்த துப்பாக்கியால் நான் எம்.ஜி.ஆரை சுட்டேன். அவர் இறக்கவில்லை. என்னை நானே சுட்டுக்கொண்டேன். நானும் இறக்கவில்லை. அப்படிப்பட்ட துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருந்தால் என்ன?.. இல்லையென்றால் என்ன? என்று சொன்னாராம் எம்.ஆர்.ராதா. நீதிமன்றத்தில் அதுவும் நீதிபதியிடமே அப்படி பேசியவர்தான் எம்.ஆர்.ராதா.