கஷ்டத்தில் சிக்கிய சிவாஜி… எம்.ஆர்.ராதாவால் மீண்ட பின்னணி.. அட என்ன திறமைசாலிப்பா இவரு?

Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் சிவாஜி கணேசன் நாடக குழுவில் இணைந்து நடித்து வந்தார். அவர் முன்னணி நடிகராக இருந்த போது அவருக்கு நேர்ந்த ஒரு கஷ்டத்தினை நடிகவேள் எம்.ஆர்.ராதா தீர்த்து வைத்தார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிப்பின் மீது சின்ன வயசில் இருந்தே சிவாஜிக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது. ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கு சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சியும் அளித்தார்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ஹாயாக இருந்த ரஜினி… ஒரே அழைப்பால் அலற விட்ட பிரபலம்..! சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?

அந்தகுழு பல ஊர்களில் முகாமிட்டு நாடகம் நடித்தி வந்தனர். மதுரை, மேலூர் என இவர்கள் மாதம் முழுதும் நாடகம் நடத்தினாலும் வசூல் என்னவோ சுமார் தான். இதனால் அங்கிருந்த நாடக குழுவுக்கே சாப்பாடு போட முடியாத நிலை இருந்தது. ஒருகட்டத்தில் இந்த குழு பரமக்குடி வந்தது.

இந்நிலையில் தான் பொள்ளாச்சியில் முன்னாடி அந்த குழுவில் இருந்த எம்.ஆர்.ராதாவை சந்திக்கிறார் பொன்னுசாமி. பரமக்குடி நாடக காண்ட்ராக்டர் பல இடைஞ்சல் தருவதாகவும், சொன்ன காசை கொடுக்காமல் இழுத்து அடிப்பதாகவும் நீ தான் என்ன காப்பாத்தணும் என பொன்னுச்சாமி கேட்க உடனே ஒத்துக்கொண்டார் எம்.ஆர்.ராதா. இதனால் அவர் குழுவினை மீட்க உடனே பரமக்குடி சென்றார்.

ஏற்கனவே சில படங்களில் நடித்து தெரிந்த முகமாக மாறி இருந்த எம்.ஆர்.ராதாவை பார்த்த காண்ட்ராக்டர் சந்தோஷமாக வரவேற்றார். ரொம்ப நாட்களாக நீங்க இருப்பதால் நான் இங்க நாடகம் போட்டாலும் வசூல் இருக்காது. நாம நாமக்கல் போய் நாடகம் போடலாம் என்கிறார். காண்ட்ராக்டரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இதனால் அவரை முன்னே போய் அனுமதி வாங்குங்கள் என அனுப்பிவிட்டார் எம்.ஆர்.ராதா.

இதையும் படிங்க: கேஜிஎப் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட்!.. தெறி மாஸா உருவாகவுள்ள 3ம் பாகம்!.. பி ரெடி ஃபேன்ஸ்

நாடகக்குழுவினை பின்னே அழைத்து கொண்டு சேலம் சென்று விட்டார். அவர்கள் செல்லும் முன்னரே நாடகம் அனுமதியுடன் காத்து இருந்தார் பொன்னுசாமி. அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதாவும் இணைந்து நடித்து கொடுத்தார். தொடர்ச்சியாக 100 நாட்கள் அந்த நாடகம் ஓடி பெரிய வரவேற்பினை பெற்றது. இதனால் சிவாஜிக்கும் வாய்ப்பு கிடைத்து வருமானத்திற்கும் வழி கிடைத்ததாம்.

பின்னாளில் அதே சிவாஜி சினிமாவில் நடிகரான பின்எம்.ஆர்.ராதாவோடு இணைந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story