எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட வரலாற்றை தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் அறிவார்கள். எம்.ஆர்.ராதா , எம்.ஜி.ஆர் ஆகியோர் தொடக்கத்தில் மிக நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். ஒரு நாள் எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார் எம்.ஆர்.ராதா.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடிரென எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். அதன் பின் எம்.ஆர்.ராதா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரின் உயிருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த வழக்கில் எம்.ஆர்.ராதாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அதன் பின் 3 ஆண்டுகள் குறைக்கப்பட்டு எம்.ஆர்.ராதா விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் 1964 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்.
எம்.ஜி.ஆர் பணம் கொடுக்கவில்லை
எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை எதற்காக சுட்டார் என்பதற்கான தெளிவான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து ஒரு ராதா ரவி ஒரு பேட்டியில் பேசியபோது, “அப்பாவும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் வாசு என்பவர், பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தை தயாரிக்க எனது தந்தையிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கேட்டிருந்தார். அவர் பணம் தருவதாக ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டையும் வாங்கித் தருவதாக கூறியிருந்தார்.
எனது தந்தை அவரது சொந்த தோட்டத்தை அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்திருந்தார். அந்த பணத்தை தயாரிப்பாளர் வாசு திருப்பி தரவேண்டும். ஆனால் அந்த பணத்தை எம்.ஜி.ஆரே தருவதாக கூறினார். ஆனால் பல நாட்களாகியும் எம்.ஜி.ஆர் பணம் தராமல் என் தந்தையை சுற்றவிட்டார். அந்த கோபத்தினால்தான் அவர் எம்.ஜி.ஆரை சுட்டார்” என கூறினார்.
கேள்வியை எழுப்பிய டைட்டில்
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த சினிமா பத்திரிக்கையாளரான சுரா, எம்.ஜி.ஆர் துப்பாக்கி சூடு குறித்து ஒரு முக்கியமான தகவலை கூறியுள்ளார்.
“எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக கூறுவார்கள். அவர் தன்னை தானே சுட்டுக்கொண்டது உண்மையா என்பது தெரியவில்லை. பின்னாளில் எம்.ஆர்.ராதா ஒரு படத்தை தயாரித்தார். அதற்கு ‘சுட்டேன் சுட்டான் சுட்டேன்’ என டைட்டில் வைத்திருந்தார். ஆதலால் உண்மையிலேயே என்ன நடந்தது என்பது அவர்கள் இருவருக்கும்தான் தெரியும்” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: குரலால் வளர்ந்து குரலாலேயே வீழ்ந்த மைக் மோகன்!. என்ன நடந்துச்சு தெரியுமா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…