படம் பிடிக்கலனா சப்போர்ட் பண்ணாதீங்க…வெளிப்படையாகப் பேசிய Mr. X இயக்குநர்!

Published on: April 12, 2026
mr x tamil movie
---Advertisement---

ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடிப்பில் உருவாகியுள்ள படம் Mr. X . FIR பட புகழ் மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் வகையை சார்ந்தது. பிரின்ஸ் பிச்சர்ஸ் சார்பில் எஸ். லஷ்மன்குமார் மற்றும் மேவரிக் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலரை பார்த்த பலர் மிரண்டுவிட்டனர். ஆங்கில படங்களுக்கு நிகராக இருந்ததாக பல்ரும் பாரட்டினார்கள். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படம் தொடர்பான விழா ஒன்றில் பேசிய இயக்குனர் னு ஆனந்த், படம் பார்த்துவிட்டு உங்களுக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ பிடித்திருந்தால் மட்டுமே அதற்கு உங்களது ஆதரவை அளியுங்கள். ஒருவேளை படம் உங்களுக்கு நன்றாக இல்லை என்று தோன்றினால், தயவுசெய்து ஆதரவு அளிக்காதீர்கள். நான் பார்வையாளர்கள் மத்தியில் எந்தவொரு வீண் எதிர்பார்ப்புகளையும் உருவாக்க விரும்பவில்லை. இது இதற்கு முன் தமிழ் சினிமாவில் எவரும் கண்டிராத அதிசயமான படமோ அல்லது இது ஒரு ‘துரந்தர்’ ரக படமோ இல்லை. ஆனால், நீங்கள் திரையரங்கிற்கு வந்து கொடுக்கும் பணத்திற்கு முழுமையான மதிப்புள்ள ஒரு நேர்த்தியான, சிறந்த ஸ்பை ஆக்‌ஷன் படமாக இது நிச்சயம் இருக்கும். இது ஒரு இயக்குநராக உங்களுக்கு நான் அளிக்கும் வாக்குறுதி என்று பேசினார்.

பொதுவாக சினிமா விழாக்களில் தங்கள் படத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்வது வழக்கம். ஆனால் இபட இயக்குனரின் வெளிப்படையான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.