நடிகை மிருணாள் தாகூர், தற்போது இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர்.
பல சீரியல்களில் முன்னணி நடிகையாக பிரபலமானவர். மராத்தி படமான விட்டி தண்டு படத்தில் மிருணாள் தாகூர் கதாநாயகியாக அறிமுகமானார்.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் சோனியா படத்தின் மூலம் இந்தி சினிமாவில் மிருணாள் தாகூர் பிரபலமானார். பட்லா ஹவுஸ் மற்றும் சூப்பர் 30 ஆகிய படங்களில் முறையே ஜான் ஆபிரகாம் & ஹிருத்திக் ரோஷன் உடன் நடித்து மிருணாள் தாகூர் புகழ் பெற்றார்.
ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக் ஆன ஜெர்ஸி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் வெளியான சீதா ராமம் படத்தில் சீதா மகாலெட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய மொழிகளில் மிருணாள் தாகூர் புகழ் பெற்றார்.
தெலுங்கின் முன்னணி இயக்குனரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான வேடத்தில் நடித்தார்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்க, ஸ்வப்னா சினிமா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த ‘சீதா ராமம்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
தடம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் மிருணாள் தாகூர் நடித்துள்ளார். தற்போது நானி நடிப்பில் உருவாகி வரும் நானி30 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை மிருணாள் தாகூர், விதவிதமான உடைகளில் என்ட்ரி கொடுத்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக மிருணாள் தாகூர் கலந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மிருணாள் தாகூர் பகிர்ந்துள்ளார். இந்த இரவை தன்னால் மறக்க முடியாது என மிருணாள் தாகூர் பதிவிட்டுள்ளார். மாடர்ன் & பாரம்பரிய சேலை அணிந்து மிருணாள் தாகூர் கான் பட விழாவில் கலந்து கொண்டார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…