மொழி படத்தில் அப்படி நடிக்க எம்.எஸ்.பாஸ்கர் செஞ்ச விஷயம். டெடிகேஷன்னா அது இதுதான்!..

MS Bhaskar: தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், சினிமா நடிகர் என பன்முக திறமை கொண்டவர் எம்.எஸ்.பாஸ்கர். சின்ன பாப்பா பெரிய பாப்பா என்கிற சீரியல் மூலம்தான் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். சினிமாவில் பல நடிகர்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
சீரியலுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து கொண்டிருந்தார். எல்.ஐ.சி. முகவராகவும் இவர் வேலை செய்திருக்கிறார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்துள்ளார். தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டால் கண்டிப்பாக அதில் வரும் ஹீரோவின் அப்பா வேடத்திற்கோ அல்லது காமெடி கதாபாத்திரத்திற்கோ இவர் வசனம் பேசுவார்.
இதையும் படிங்க: தளபதி68க்கும் விடாமுயற்சிக்கும் இவ்ளோ ஒற்றுமையா? ரியல் போட்டி ஆரம்பிச்சிருச்சு! அடிமடியில கைவைக்காம இருந்தா சரி
பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். திருமதி ஒரு வெகுமதி படம் மூலம்தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்துடன் நடித்தார். அப்படியே திருப்பாச்சி, சிவகாசி, மொழி, சிவாஜி, சாது மிரண்டா, சந்தோஷ் சுப்பிரமணியம், தசாவதாரம், 8 தோட்டக்கள் என விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
குணச்சித்திர நடிகராக மட்டுமில்லாமல் நிறைய படங்களில் காமெடி வேடத்திலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். குறிப்பாக ராதா மோகன் இயக்கிய பல படங்களிலும் இவருக்கு அழுத்தமான வேடங்களில் கிடைத்தது. அதில் முக்கியமான படம் மொழி. இந்த படத்தில் எப்போதே இறந்து போன தனது மகனை நினைத்து மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: கமலை வச்சு பல கோடி லாபம் பார்த்த லைக்கா நிறுவனம்! ‘இந்தியன்2’ டப்பிங்னு நினைச்சிடாதீங்க – இது வேற மாறி
இந்த படத்தில் நடிக்கும்போது பிரம்மை பிடித்தவர் போல இருக்க வேண்டும் என்பதற்காக அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் இரவு முழுவதும் தூங்காமல் இருப்பாராம். மேலும், அப்படியே ஜிம்முக்கு போய் டிரெட்மில்லில் வாக்கிங் செய்துவிட்டு அத அசதி முகத்தில் தெரியும்படி நடித்தாராம்.
அவர் அவரும் காட்சிகளில் அவரின் முகத்தை உத்து கவனித்தால் நமக்கு இது புரியும். கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றால் போல் உடலையும் வறுத்தி நடிக்கும் நடிகர்களில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமலுக்கு மன்சூர் அலிகான்… விஜய்க்கு சத்யராஜா? லோகேஷின் ஸ்கெட்சே செம ஸ்பெஷல் தான்..!