ரஜினிக்கு வயதாகி விட்டது! ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்து தோனி ட்விட்டரில் பதிவு
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிற்கே சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரின் வளர்ச்சி, கடின உழைப்பு என நாம் நாள்தோறும் படித்துக் கொண்டு இருந்தாலும் அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடும் நடிகர்களின் செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
சமீபகாலமாக விஜய்யை சரத்குமார் ஒரு மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறியதிலிருந்து அதைப் பற்றிய விவாதங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. சரத்குமாரின் இந்த கருத்திற்கு விஜய் எந்தவித மறுப்பும் தெரிவிக்காத நிலையில் விஜய்க்கும் அந்த ஆசை இருக்கிறது போல என்று அவர் மீதும் சில குற்றச்சாட்டுகள் ரஜினி ரசிகர்கள் வைத்துக்கொண்டு வந்தனர்.
ஆனால் மற்ற முன்னணி பிரபலங்கள் ,சினிமா விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே அவரவர் பட்டம் அவரவருக்கு உரியது. அதை யாரும் எந்த சூழ்நிலையிலும் தட்டிப் பறிக்க முடியாது என கூறினார்கள்.
ஒரு பேட்டியில் இதைப் பற்றி பேசிய விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் கூட "ஏன் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு மட்டும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்? எம்ஜிஆரின் பட்டம் இருக்கிறது ,சிவாஜியின் பட்டம் இருக்கிறது, பாகவதர் பட்டம் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு ரஜினியை மட்டுமே ஏன் சீண்டி கொண்டு இருக்கிறீர்கள்?" என ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உயிர் மூச்சாக இருக்கும் தோனியின் தலைமையிலான ஐபிஎல் 2023 போட்டி நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பிற்கு நடுவே சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.
இதையும் படிங்க :ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகருக்கு ஏற்பட்ட நிலை!. கடுப்பாகி திரையரங்கை நொறுக்கிய ரசிகர்கள்..
கோப்பையை வென்ற சென்னை அணிக்கு ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் இணையதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தோனியின் ஒரு ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது நேற்று நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி கோப்பையை வென்றது. அதை குறிப்பிடும் வகையில் தோனியின் இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகின்றது.
அதாவது 2013 லேயே தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி "ரஜினிக்கு வயதாகி விட்டது என்று கடவுள் உணர்ந்து விட்டார் போல. அதனால் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஜடேஜாவை உருவாக்கி இருக்கிறார்" என தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். நேற்று ஜடேஜாவின் அந்த அதிரடி ஆட்டமும் தோனியின் இந்த ட்விட்டர் பதிவும் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.