ஏ.ஆர்.ரஹ்மான் செய்த வேலை!.. எஸ்.பி.பி-யிடம் போன் போட்டு அழுத எம்.எஸ்.விஸ்வநாதன்..
AR Rahman: தமிழ் சினிமாவில் இசைப்புயலாக நுழைந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அதிலும், சின்ன சின்ன ஆசை பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் இளசுகளை சுண்டி இழுத்தது. முன்னணி இசையமைப்பாளராகவும் ரஹ்மான் மாறினார். மேலும், ரஹ்மான் இசையமைத்தாலே பாடல் கேசட்டுகள் அதிகம் விற்பனை ஆனது. இளையராஜாவை மட்டுமே நம்பி இருந்த சினிமா உலகம் ஏ.ஆர்.ரஹ்மான் பக்கம் திரும்பியது.
இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனுக்காக அந்த நடிகையை கழட்டிவிட்ட ஐஸ்வர்யா ரஜினி!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..
இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே தொடர்ந்து இசையமைத்தார். தில்லானா மோகனாம்பாள் மற்றும் கரகாட்டக்காரன் ஆகிய படங்களை உல்டா செய்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய திரைப்படம்தான் சங்கமம்.
இரண்டு இசைக்கலைஞர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இப்படம் பேசியது. இந்த படத்தில் ரகுமானும், விந்தியாவும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் என்கிற பாடலை ரஹ்மான் கம்போஸ் செய்திருந்தார்.
இதையும் படிங்க: முடிஞ்சா என்கிட்ட மோதி ஜெயிச்சு பாரு! சூப்பர் ஸ்டாருக்கு சேலஞ்ச் விட்ட பவர் ஸ்டார்
இந்த பாடலை ஹரிஹரணும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பாடியிருந்தனர். எம்.எஸ்.வியை பாட வைத்துவிட்டு அனுப்பிவிட்டார் ரஹ்மான். ஆனால், முழு இசையோடு அந்த பாடலை முழுதாக கேட்டபோது அசந்துவிட்டாராம் எம்.எஸ்.வி. தனது குடும்பத்திடமும் சிலாகித்து பேசியிருக்கிறார்.
மேலும், எஸ்.பி.பியை தொடர்பு கொண்டு ‘ரஹ்மான் ஒரு பாடல் கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக என்னை பாடவைத்தார். எனக்கு நல்ல சம்பளமும் கொடுத்தார். இந்த அளவுக்கு பாடல் வரும் என நான் எதிர்பார்க்கவிலை’ என கண்ணீர் விட்டாராம்.