More
Categories: Cinema History Cinema News latest news

கண்ணதாசனை கடுப்பேத்திய எம்.எஸ்.வி!.. வந்ததோ ஒரு சூப்பர் ஹிட் மெலடி!.. என்ன பாட்டு தெரியுமா?..

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமா வரை பல நூறு பாடல்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி – கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர். இவரின் இசையில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பெரும்பாலும் எம்.எஸ்.வியின் மெட்டுக்கு கண்ணதாசன் பாடல் எழுதுவார். சில சமயங்களில் கண்ணதாசன் ஏற்கனவே எழுதிய வரிகளுக்கும் எம்.எஸ்.வி இசை அமைத்ததும் உண்டு.

MSV

பட்டின பிரேவசம் என்கிற ஒரு படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைத்து கொண்டிருந்தார். பாடல் எழுத வந்த கண்ணதாசனிடம் எம்.எஸ்.வி டியூனை பாடி காட்டினார். ஆனால், ‘என்ன ட்யூன் போட்ருக்கே.. இதுக்கெல்லாம் பாடல் எழுத முடியாது’ என கண்ணதாசன் சொல்ல, அதற்கு எம்.எஸ்.வி ‘என்ன கவிஞரே.. நீங்க எழுதின பல வரிகளுக்கு அது ஒரே சந்தம் என்றாலும் நான் விதவிதமா டியூன் போட்ருக்கேன். ஆனா இது சாதாரண டியூன்.. இதுக்கு பாட்டெழுத முடியாதுன்னு சொல்றீங்களே. நீங்க என்ன பெரிய கவிஞர்?’ என கேட்டுவிட்டாராம்.

Advertising
Advertising
Kannadasan

அட இவன் என்ன நம்மை இப்படி கேட்டுவிட்டான் என கோபமடைந்த கண்ணதாசன் அதை சவாலாக எடுத்துகொண்டு பாடலை எழுதி கொடுத்தாராம். அவர் அப்படி எழுதிய பாடல்தான் எஸ்.பி.பி. பாடிய ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ ஆகும். எம்.எஸ்.வி. அந்த பாடலை ‘லா லலா லலா’ என்று பாடிக்காட்ட அந்த ‘லா’ வை வைத்தே பாடல் எழுதினாராம் கண்ணதாசன். இந்த படம் 1977ம் ஆண்டு வெளியானது.

இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல இசை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி இந்த பாடலை பாடி ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா

Recent Posts