Connect with us

“வேண்டாம் சார் விட்ருங்க”… எச்சரித்த ஸ்ரீதர்… தோல்வி படத்தை அடம்பிடித்து உருவாக்கிய எம்.எஸ்.வி…  எல்லாம் நேரம்தான்…

MSV and Sridhar

Cinema History

“வேண்டாம் சார் விட்ருங்க”… எச்சரித்த ஸ்ரீதர்… தோல்வி படத்தை அடம்பிடித்து உருவாக்கிய எம்.எஸ்.வி…  எல்லாம் நேரம்தான்…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அப்போது மிகவும் பிரபலமான கலை இயக்குனராக திகழ்ந்த கங்காவுடன் இணைந்து பாக்யலட்சுமி புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

MSV

MSV

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தை சி.வி.ஸ்ரீதர் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. அப்போது ஸ்ரீதர் “வெண்ணிற ஆடை” என்ற பக்காவான கம்மெர்சியல் கதையையும், “கலைக்கோயில்” என்ற இசையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கலைநயமிக்க கதையையும் உருவாக்கி வைத்திருந்தார்.

CV Sridhar

CV Sridhar

இதில் “கலைக்கோயில்” கதையை திரைப்படமாக உருவாக்கினால் வெற்றி பெற வாய்ப்பில்லை என ஸ்ரீதருக்கே தோன்றியது. ஆதலால் “வெண்ணிற ஆடை” கதையையே திரைப்படமாக உருவாக்கலாம் என யோசனை சொன்னாராம் ஸ்ரீதர். மேலும் “கலைக்கோயில்” திரைப்படத்தை தானே தன்னுடைய சித்ராலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துக்கொள்வதாகவும் முடிவு செய்தார் ஸ்ரீதர்.

Kalai kovil

Kalai kovil

ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கோ வேறு ஒரு யோசனை தோன்றியது. அதாவது “கலைக்கோயில்” திரைப்படம் இசையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை என்பதால் அத்திரைப்படத்தை தன்னுடைய பாக்யலட்சுமி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தால், இசையில் புகுந்து விளையாடலாம் என நினைத்தார் எம்.எஸ்.வி.

ஆதலால் ஸ்ரீதரிடம் “கலைக்கோயில் திரைப்படத்தை நான் தயாரிக்கிறேன். வெண்ணிற ஆடை திரைப்படத்தை நீங்கள் தயாரித்துக்கொள்ளுங்கள்” என எம்.எஸ்.வி. கூறினாராம். அதற்கு ஸ்ரீதர் “கலைக்கோயில் திரைப்படம் நிச்சயமாக ஓடாது. அதனை நீங்கள் தயாரிக்க வேண்டாம்” என எவ்வளவோ எடுத்துச்சொல்லியிருக்கிறார். ஆனால் எம்.எஸ்.வி. விட்டுக்கொடுப்பதாக இல்லை.

Vennira Aadai

Vennira Aadai

ஒரு கட்டத்தில் யார் எந்த திரைப்படத்தை தயாரிக்கலாம் என சீட்டுக்குலுக்கி பார்த்தார்கள். சீட்டுக்குலுக்கியதில் எம்.எஸ்.விக்கு “வெண்ணிற ஆடை” திரைப்படமும், ஸ்ரீதருக்கு “கலைக்கோயில்” திரைப்படமும் வந்தது. அப்படியும் எம்.எஸ்.வி. விடவில்லை. “நான் கலைக்கோயில் திரைப்படத்தைத்தான் தயாரிப்பேன்” என ஒற்றைக்காலில் நின்றாராம்.

CV Sridhar

CV Sridhar

ஸ்ரீதரும் ஒரு கட்டத்தில் சரி என ஒப்புக்கொண்டார். அதன்படி எம்.எஸ்.வி. “கலைக்கோயில்” திரைப்படத்தை தயாரித்தார். ஸ்ரீதர் அத்திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு ஸ்ரீதர் தனது சித்ராலயா புரொடக்சன்ஸ் மூலம் “வெண்ணிற ஆடை” திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.

MSV

MSV

1964 ஆம் ஆண்டு “கலைக்கோயில்” திரைப்படம் வெளியாகி மிகவும் சுமாராக ஓடியது. ஆனால் 1965 ஆம் ஆண்டு வெளியான “வெண்ணிற ஆடை” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம்தான் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். இறுதியில் ஸ்ரீதரின் கணிப்புத்தான் வென்றது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top