சிவாஜி - எம்.எஸ்.வி இடையே வந்த சவால்!.. வந்ததோ ஒரு சூப்பர் மெலடி!.. அட அந்த பாட்டா?!..

50,60களில் மெல்லிசை பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர். அவர்களுக்கு மட்டுமல்ல அந்த காலகட்டத்தில் வெளிவந்த பெரும்பலான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் அவர்தான்.

ஒருமுறை தொலைப்பேசியில் எம்.எஸ்.வி-யிடம் பேசிய சிவாஜி ‘இங்கிலாந்துல கிளிஃப் ரிச்சர்ட்-னு ஒரு பாடகர் இருக்கார். அவர் மாதிரி ஸ்லோ பேஸ்டு பாட்டு எனக்கு ஒன்னு வேணும். அந்த மாதிரி உன்னால போட முடியுமா?.. இல்ல ஃபாஸ்ட் பீட் பாட்டு மட்டும்தான் போடுவியா?’ என கேட்டாரம். அதற்கு எம்.எஸ்.வி ‘என்னால் போட முடியும்.. அதுக்கு உங்களால நடிக்க முடியுமா?’ என கேட்டாராம். சிவாஜியோ ‘நீ போடு.. நான் நடிக்கிறேனா இல்லையா பாரு’ என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.

sivaji

இதை சவாலாக எடுத்துக்கொண்ட எம்.எஸ்.வி. சிவாஜி சொன்னது போலவே ஒரு அருமையான டியூனை போட்டு, உடனே கண்ணதாசனை அழைத்து பாட்டெழுதி, உடனே டி.எம்.எஸ்-ஐ அழைத்து பாடல் ரிக்கார்டிங் செய்து, ஆடியோவை சிவாஜியிடம் கொடுத்துவிட்டாராம். உடனே இயக்குனர் பீம்சிங்கை அழைத்த சிவாஜி ‘இன்னைக்கு ஷூட்டிங் வேண்டாம். ஒரு நாள் கழித்து ஷூட்டிங் வைத்து கொள்வோம்’ என சொன்னாராம்.

இதையும் படிங்க: சிவாஜியை கலாய்த்து பாடல் எழுதிய வாலி!.. கோபத்தின் உச்சிக்கே போன எம்.ஜி.ஆர்..

இது பந்துலுவுக்கே ஆச்சர்யமாக இருந்துள்ளது. ஏனெனில் சிவாஜி எப்போதும் படப்பிடிப்பை தள்ளிபோடும்படி கேட்கவே மாட்டார். என்ன ஆச்சி என கேட்க ‘நான் எம்.எஸ்.வியிடம் ஒரு சவால் விட்டேன். அவர் அருமையாக பாடலை உருவாக்கிவிட்டார். அதற்கு கண்ணதாசன் சிறப்பான வரிகளை எழுதிவிட்டார். அதேபோல், நான் எதிர்பார்த்ததை விட டி.எம்.எஸ் சிறப்பாக பாடிவிட்டார். இது எனக்கான நேரம். நான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும்’ என சொன்னாராம்.

msv

msv

அதன்பின் அந்த பாடலுக்கு எப்படி நடிப்பது என சிவாஜி வீட்டிலேயே ஒத்திகை பார்த்துள்ளார். அடுத்தநாள் படப்பிடிப்பில் அந்த பாடலுக்கு அசத்தலாக நடித்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அந்த பாடல்தான் ‘யார் அந்த நிலவு. ஏன் இந்த கனவு’ என்கிற பாடல். கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு மிகவும் ஸ்டைலாக அந்த பாடலில் நடித்து ரசிக்க வைத்தார் நடிகர் திலகம். சாந்தி படத்தில் இடம் பெற்ற பாடல் அது.

அந்த பாடலை திரையில் பார்த்த எம்.எஸ்.வி காரை எடுத்துக்கொண்டு சிவாஜியின் வீட்டிற்கு போய் அவரை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து அவரை பாராட்டினாரம். சிவாஜியும், அவரும் கண்ணில் நீர் கசிய மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்களாம்.

இதையும் படிங்க: கூடவே இருந்து முதுகில் குத்திய அசோகன்! நிஜத்திலும் வில்லனாகவே இருந்திருக்காருப்பா..

 

Related Articles

Next Story