
Cinema History
டி.எம். எஸ்.வீட்டிற்கு அழுது கொண்டே வந்த எம்.எஸ்.வி!.. காரணத்தை கேட்டு ஷாக் ஆன பாடகர்..
அந்தக காலத்திலேயே மயக்க வைக்கும் காதல் பாடல்கள், மனதை உருக வைக்கும் சோகப் பாடல்கள், என எல்லா ஜோனர்களிலும் தனது வாய் ஜாலம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பழம்பெரும் பாடகரான டி.எம்.எஸ். எம்ஜிஆர்,சிவாஜி போன்ற அனைத்து முன்னனி நடிகர்களுக்கும் பல பாடல்களை பாடியிருக்கிறார்.
ஆனால் இது டி.எம்.எஸ் தான் பாடினார் என்று யாராலும் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு எந்த நடிகருக்காக பாடுகிறாரோ அந்த நடிகரின் குரலிலேயே பாடலை பாடுவது தான் சிறப்பம்சம். சிவாஜி பட பாடல்களை எடுத்துக் கொண்டால் சிவாஜி பாடியதை போலவே இருக்கும்.

tms1
அதே போல எங்கு ஏற்ற இறக்கங்கள் வேண்டுமோ அதே முறையில் தன்னுடைய குரலை ஏற்றி இறக்கி பாடுவார். இவருடன் எம்.எஸ்.வியும் இணைந்தால் அந்த பாடலே ஒரு தனிச்சிறப்பு தான். அவ்வப்போது இருவருக்கும் இடையே சண்டைகளும் வந்திருக்கிறதாம்.
டி,எம்,எஸை பற்றி டாக்குமென்ரி படத்தை எடுக்கும் இயக்குனர் விஜயராஜ் அவரை பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். அதாவது ஒரு நாள் எம்.எஸ்,வி டி.எம்.எஸ் வீட்டிற்கு வந்தாராம். வந்தவர் அழுது கொண்டே வந்திருக்கிறார். டி.எம்.எஸ் என்ன என்று பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் அவர் காரணத்தை சொல்லாமல் சிறிது நேரம் அழுது கொண்டே இருந்திருக்கிறார்.அதன் பின் தண்ணீர் அருந்திவிட்டு காரணத்தை சொன்னாராம்.

tms2
‘இப்பொழுது தான் தெய்வமகன் படத்தை பார்த்தேன். அந்த படத்தில் நீ பாடிய தெய்வமே பாடலை கேட்டு மனது மிகவும் உருகிவிட்டது. என்னம்மா பாடியிருக்க? கேட்க கேட்க எனக்கு மனதே கலங்கி விட்டது’ என்று கூறியிருக்கிறார். உடனே இதை கேட்ட டி.எம்.எஸ் ‘எல்லாம் உங்களால் தானே’ என்று சொன்னதும் அதற்கு அவர் ‘இல்ல என்ன குரல்?’ என்று வியந்து பாராட்டினாராம். பாடலை கேட்டு பொறுக்கமுடியாமல் தான் உடனே டி.எம்.எஸ் -யை பார்க்க அவர் வீட்டிற்கே வந்தாராம் எம்.எஸ்.வி.
இதையும் படிங்க :ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள்!.. இப்போதைய அவர்களின் நிலை?..