‘எங்கேயும் எப்போதும்’ பாடலை அங்கிருந்துதான் சுட்டேன்!. அட எம்.எஸ்வியே சொல்லிட்டாரே!..

by சிவா |   ( Updated:2025-04-22 02:54:31  )
msv
X

1950 முதல் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழ் சினிமா இசையில் கொடிகட்டி பறந்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் 60களில் தமிழ் படங்களில் கலக்கிய ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் என பலருக்கும் இவர் இசையமைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு அவரின் பாணியிலும், சிவாஜிக்கு அவரின் பாணியிலும் இசையமைத்து கொடுப்பார். இவரின் மெல்லிசை பாடல்களில் மயங்கிய ரசிகர்கள் அவருக்கு மெல்லிசை மன்னர் என்கிற பட்டத்தை கொடுத்தவர்கள். துவக்கத்தில் இசை மேதை ராமமூர்த்தியுடன் இணைந்து பல படங்களுக்கும் இசையமைத்தார். அதன்பின் தனியாக இசையமைக்க துவங்கினார். மெட்டுக்கள் இவரிடம் அருவி போல கொட்டும்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தியேட்டரில் முறுக்கு விற்கும் வேலையெல்லாம் விஸ்வநாதன் செய்திருக்கிறார். 1930,40களில் திரைப்படங்களில் பெரும்பாலும் அதிக பாடல்கள் இடம் பெற்றிருக்கும். தியேட்டரில் வேலை செய்யும்போது அந்த பாடல்களை கேட்டு கேட்டு அவருக்கு இசையின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

msv
msv

சினிமாவில் நடிக்க வேண்டும், பாட்டு பாட வேண்டும் என்றே ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அதன்பின் பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக வேலை செய்திருக்கிறார். இவர் இசையமைத்துகொண்டிருந்த போது தமிழகத்தில் ஹிந்தி பாடல்களும் பிரபலமானது. இளையராஜா வந்த பின் அது நிறையவே மாறி பலரும் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள்.

இளையராஜா அதிக படங்களுக்கு இசையமைத்தாலும் எம்.எஸ்.வியும் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு ஒரு இசை நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.வி நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்’ பாடல் எப்படி உருவானது என சொல்லியிருந்தார்.

அந்த பாடல் எனக்கு ஒரு சோதனை. தேனிசை மழை என டைட்டிலில் போட்டு விட்டார்கள். நான் பயந்துட்டேன். ஏன்னா நான் எப்பவும் பயபக்தியோட வேலை செய்வேன். ஒரு நாட்டுப்புற பாட்டை எடுத்து அதை வெஸ்டர்ன் பண்ணனும் என முடிவு செஞ்சேன். ’கத்தால காட்டுக்குள்ள விறகொடிக்க போனானாம்’ என்கிற பாடலை ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்’ என மாற்றினேன்’ என சொல்லியிருந்தார். இதேபோல், இளையராஜாவும் பல நாட்டுப்புற பாடல்களை சினிமா பாடல்களாக மாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story