வேலன் படத்தின் புதிய போஸ்டர்... சூரியுடன் கலக்கும் முகேன் ராவ்...
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த முகேன் ராவ் நடிக்கும் வேலன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த புதிய போஸ்டரில் சூரியுடன் தோன்றி இருக்கிறார் முகேன் ராவ்.
முகேன் ராவ், பிரபு, சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருக்கும் வேலன் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து விரைவில் திறைக்கு வர இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து மோசன் போஸ்டரும் வெளியானது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மோஷன் போஸ்டரை பார்க்கும் போது நகைச்சுவைக் கலந்த குடும்பத் திரைப்படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த நிலையில், படத்தின் அடுத்த போஸ்டராக முகேன் ராவ், சூரியுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தில் சூரி மலையாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்டரில் படத்திற்கான டீஸர் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தை தயாரிக்கும் கலைமகன் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு