சொதப்பிய மணிரத்னம்.. 5 இயக்குனர்கள் வேலை பார்த்த நாயகன்!. வெளிவராத தகவல்!..

Published On: November 24, 2024
manirathnam
---Advertisement---

Nayagan: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். தமிழ் சினிமாவில் முக்கிய படமாக எப்போதும் நாயகன் இருக்கிறது. அப்படி ஒரு கிளாசிக் படமாக நாயகனை உருவாக்கி இருந்தார்கள். மணிரத்னம் அமைத்த திரைக்கதை, கமலின் நடிப்பு, அப்படத்திற்கு இளையராஜா அமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை என எல்லாமே ரசிகர்களால் மறக்க முடியாதவை.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘தென் பாண்டி சீமையிலே’ இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த படத்தில் நாசர், நிழல்கள் ரவி, ஜனகராஜ், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்கள். ஹாலிவுட்டில் வெளிவந்து வரவேற்பை பெற்ற காட் ஃபாதர் பட மேக்கிங் போல நாயகனை உருவாக்கியிருந்தார் மணிரத்னம்.

nayagan
#image_title

மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி இப்படத்தை உருவாக்கியிருந்தார் மணிரத்னம். இந்த படத்தில் இளைஞன், நடுத்தர வயது மற்றும் முதியவர் என 3 கெட்டப்புகளில் அசத்தியிருந்தார் கமல். இந்த படத்தை முதலில் தயாரித்தவர் முக்தா சீனிவாசன். ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகரித்து கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் அவர் விலகிக்கொண்டார்.

அவரிடமிருந்து மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஷ் வாங்கி படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்நிலையில், முக்தா சீனிவாசனின் சகோதரர் ஊடகம் ஒன்றில் இப்படம் பற்றி பல முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியாதாவது:

nayagan
nayagan

அப்போதே ஒரு கோடியே 10 லட்சம் செலவில் உருவான படம் நாயகன். தயாரிப்பாளரிடம் சொல்லாமலேயே மேக்கப் செலவை இழுத்துவிட்டார் கமல். இந்த படத்தில் கமல் கடத்தல் பொருட்களை உப்பு மூட்டைகளுடன் கடலுக்குள் இறக்கும் காட்சியை Once upon a time america என்கிற ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டோம். ஒரு வங்காள மொழி நாவலில் இருந்து விபச்சாரம் செய்யும் சிறுமி நாளை தனக்கு பரிட்சை இருப்பதாக கதாநாயகனிடம் சொல்லும் காட்சியை சுட்டோம்.

இந்த படத்தை ஆறரை மணி நேரம் எடுத்து வைத்திருந்தார் மணிரத்னம். எனவே, பஞ்சு அருணாச்சலம் மற்றும் 5 இயக்குனர்களை அழைத்து போட்டு காட்டி அவர்களிடம் கருத்து கேட்டு இரண்டரை மணி நேர படமாக மாற்றினோம். அதற்கு பெரும் உதவியாக இருந்தவர் எடிட்டர் லெனின்’ என அவர் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: அயோத்தி படத்தை மிஸ் செய்து விட்டேன்… பிரபல நடிகர் சொல்றத பாருங்க!..