Categories: Cinema News latest news

கூலி படம் பார்க்க வர வேண்டாம்.. தியேட்டர்களின் அறிவிப்பால் படக்குழு அதிர்ச்சி..

Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இப்படம் ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சௌபின் சாகிர் மற்றும் உபேந்திரா, சத்தியராஜ், சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ரஜினி உள்ளிட்ட அந்த படத்தில் நடித்த எல்லோரும் கலந்து கொண்டனர். கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக உள்ளதால் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வெளிநாடுகள் என எல்லா இடங்களிலும் முன்பதிவில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது.

இந்தப் படத்திற்கு சென்சார் போர்ட் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. ஏ சான்றிதழ் என்றால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏ சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும் தியேட்டர்களில் அதை கடைபிடிக்க மாட்டார்கள். ஆனால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இதை கண்டிப்பாக கடைப்பிடிப்பார்கள்.

#image_title

அந்த வகையில் ஐநாக்ஸ், பி.வி.ஆர், ஏஜிஎஸ் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூலி படத்திற்கு 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என போர்டு வைத்திருக்கிறார்கள். மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க அடையாள சான்றுடன் வருமாறும் குறிப்பிட்டுள்ளனர். எனவே கண்டிப்பாக இது கூலி படத்தின் வசூலை பாதிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

Published by
சிவா