ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம் செய்யும் பாடு!.. ‘ஜெய்லர்’ படத்தால் 8 லட்சத்தை இழந்த நடிகை!..
தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்களும் கொண்டாடும் தலைவர்களாகவே கருதப்படுகிறார்கள். அதுவும் சின்ன சின்ன நடிகர்கள் , துணை நடிகர்கள் என கீழ்மட்டத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆசை தலைவர் படத்தில் ஒரு ஓரத்தில் நின்றால் அதுவே போதும் என தனக்கு பிடித்தமான நடிகர்களை பற்றி கூற கேள்விப் பட்டிருக்கிறோம்.
அந்த வகையில் ரஜினியின் பெயரைச் சொல்லி ஒரு நடிகையிடம் இருந்து சுமார் 8.50 லட்சத்தை பறித்த கும்பலைக் குறித்த சம்பவம் தான் இது. மும்பையில் மாடல் அழகியாக இருப்பவர் தான் சன்னா சூரி. இவர் மும்பையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாடல் அழகியாகவும் இருக்கிறார். சமீபத்தில் புஷ்பா - 2விலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறாராம்.
இவரும் சில தினங்களுக்கு முன் பியூஸ் ஜெயின் என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. நாங்கள் ஜெய்லர் படப்பிடிப்பில் இருந்து பேசுவதாகவும் அந்த படத்தில் ரஜினிக்கு மகளாகவும் அவர் ஒரு போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறதுக்காகவும் ஒரு புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருப்பதாகவும் சன்னாவிடம் கூறியிருக்கிறார்.
மேலும் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்கள் என்றும் அதற்காக ஒரு போலீஸ் டிரெஸில் வீடியோ எடுத்து அனுப்பும் படியும் கேட்டிருக்கிறார். இதனையடுத்து பேசிய சன்னாவின் அம்மா இது எதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் சன்னா , நெல்சன், ரஜினி என அனைவரும் இருக்கும் புகைப்பட டிசைனை எடுத்து அனுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க : காருக்குள் இருந்த அஜித்திற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்!.. சும்மா லெஃப்ட் ரைட் விட்ட தல!.. அடுத்து செஞ்ச காரியம் தான் உச்சக்கட்டமே!..
அதை பார்த்து நம்பிய அந்த நடிகையின் குடும்பம் அவர் சொன்ன மாதிரி வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார். அனுப்பிய சில தினங்களுக்கு பிறகு மீண்டும் அந்த நபர் தொலைபேசியில் அழைத்து வீடியோவை பார்த்து ரஜினி பாராட்டினார் என்பதையும் தெரியப்படுத்தியிருக்கிறார். அதன் பின் டிக்கெட் செலவு என பிற செலவுகளுக்கு என மொத்தம் இந்த நடிகையிடம் இருந்து சுமார் 8.48 லட்சத்தை அந்த நபர் அபேஸ் செய்திருக்கிறார்.
சன்னா அவர் அனுப்பிய் அந்த டிசைனை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஜெய்லர் படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிறேன் என்று பெருமையாக பதிவிட அதை பார்த்த ஜெய்லர் படக்குழு ஷாக் ஆகி சன்னாவை தொடர்பு கொண்டு பேசியபிறகு தான் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டாராம் சன்னா.
அதன் பிறகு மும்பையில் பியூஸ் ஜெயின் மீது போலீஸில் புகார் செய்திருக்கிறார் சன்னா. அந்த நபரை தேடும் பணியில் இறங்கியிருக்கிரது போலீஸ். இந்த செய்தி இப்போது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தான் இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறினார்.