Connect with us

Cinema News

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமயா.?! காமெடி நடிகர் முனீஸ்காந்த் புதிய ஜோடி.! ஷாக்கான ரசிகர்கள்.!

அஜித் நடித்த காதல் கோட்டை எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகள் விஜயலட்சுமி ,  இயக்குனர் வெங்கட்பிரபு முதன்முதலாக இயக்கிய சென்னை-28 திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே நேரம் அதே இடம் , அஞ்சாதே போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பின்னர் சரியான வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்த இவர், ஆடாம ஜெயிச்சோமடா எனும் திரைப்படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போதே ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆனார்கள்.

தற்போது அதனை மிஞ்சும் அளவிற்கு ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது காமெடி நடிகர் முனிஸ்காந்த் அவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஹீரோயினாக விஜயலட்சுமி நடிக்க உள்ளாராம்.

இதையும் படியுங்களேன்  – அடுத்த கே.ஜி.எப்-க்கு உதவி செய்த தனுஷ்.! மிரட்டும் வீடியோ இப்போ ரிலீஸ்..

காமெடி நடிகர் கருணாகரன் கூட நடித்தால் ஓகே  தான் ஏனென்றால் அவரது வயதுக்கும் விஜயலட்சுமியின் வயதுக்கும் சரியாக இருந்தது. ஆனால், வயது மூத்தவரான முனீஸ்காந்த் அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடிப்பது ரசிகர்களை கொஞ்சம் ஷாக் ஆக்கி உள்ளது. இருந்தும் இது காமெடி படம் என்பதால் டூயட் காட்சிகள் எதுவும் இருக்காது, கதைக்கு தேவையானதால் தான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top