Categories: latest news

மன்சூர் அலிகானுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?.. திரையுலகில் பரபரப்பு…..

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். முதல் படமே செம ஹிட். பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் மன்சூர் அலிகான். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாகவும் நடித்தார். தற்போது குணச்சித்திரம், வில்லன், காமெடி என கலந்து கட்டி நடித்து வருகிறார்.

ஒருபக்கம் சர்ச்சைகளுக்கும் அவர் பெயர் போனவர். அரசாக இருந்தாலும் சரி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

Also Read

இந்நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பெரியார் பாதை மேற்கு புரத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து அந்த வீட்டை அவர் கட்டியிருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
சிவா