Connect with us

ராஜ்கிரண் மகளை கடத்தி சென்ற சீரியல் நடிகர்…உண்மையில் நடப்பது என்ன?….

rajkiran

Cinema News

ராஜ்கிரண் மகளை கடத்தி சென்ற சீரியல் நடிகர்…உண்மையில் நடப்பது என்ன?….

ராஜ்கிரணின் மகள் பிரியா ஜீனத்தை சீரியல் நடிகர் முனிஷ் ராஜா திருமணம் செய்து கொண்டதாக நேற்று திடீரென செய்திகள் பரவியது. இது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்திகள் பரவிய சில மணி நேரங்களில் சீரியல் நடிகர் முனிஷ்ராஜாவும், ஜீனத்தும் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில், முறைப்படி தாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், பெற்றோர்களின் சம்மதப்படி விரைவில் திருமணம் செய்து கொள்வோம். அதற்கான அழைப்பிதழகளை அனைவருக்கும் கொடுப்போம் என அந்த வீடியோவில் கூறியிருந்தனர்.

munish

இதற்கிடையில், இதுபற்றி விளக்கமளித்து ராஜ்கிரண் தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் ‘தனக்கு ப்ரியா என்கிற வளர்ப்பு மகள் இருந்ததாகவும், அவரோடு முனிஷ்காந்த் முகநூல் மூலம் பழகி, பேசி மயக்கி தன் வலையில் சிக்க வைத்தார். அவரை பற்றி நான் விசாரித்த போது அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது எனக்குத்தெரிய வந்தது.

இதையும் படிங்க: அந்த சிரிப்புலயே விழுந்துட்டோம்!…அழகை மிச்சம் வைக்கமால் காட்டும் சினேகா….

எனவே, நானும், என் மனைவியும் என் மகளிடம் புத்திமதி கூறினோம். அவளும் வேறு மாப்பிள்ளை பாருங்கள் எனக்கூறினாள். 4 மாதங்களுக்கு முன்பு என் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. முனிஷ்காந்த் அவரை அழைத்து சென்றதாக கருதுகிறேன்.

rajkiran

என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன். ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்…

இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும் நான் பொறுப்பல்ல, என்பது தான். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சீரியல் நடிகர், தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப் பெண்ணிற்கு கணவனாகிக்கொள்ளக்கூடும். ஆனால், எந்தக்காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கிரணின் சம்மதத்தோடு முனிஷ்காந்த் முறைப்படி பிரியாவை திருமணம் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top