யார் இந்த டேனியல் பாலாஜி? முரளிக்கு நடந்த அதே சோகம்தான் இவருக்கும்.. அவரை பற்றிய சில நினைவுகள்

Actor Daniel Balaji: தமிழ் சினிமாவில் ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் ரசிகர்களின் அன்பை பெற்றவர் நடிகர் டேனியல் பாலாஜி. தன்னுடைய மிரட்டலான நடிப்பால் சினிமாவில் ஒரு சிறப்பான அந்தஸ்தை பெற்றார். வெறும் பாலாஜி என்ற பெயரைக் கொண்ட இவர் எப்படி டேனியல் பாலாஜி ஆனார் என்பதை பற்றி மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

நடிகர் முரளியின் சித்தி பையன்தான் இந்த டேனியல் பாலாஜி. அதனால் முரளியின் தாக்கம் டேனியல் பாலாஜிக்கும் வர எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தரமணியில் இருக்கும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்திருக்கிறார். அதுவும் முரளியின் ஆலோசனையின் பேரில்தான் சேர்ந்திருப்பார் என செய்யாறு பாலு கூறினார். அதுமட்டுமில்லாமல் முரளியும் 45 வயதில்தான் இறந்தார். அதை போல் டேனியல் பாலாஜியும் அதே 48 வயதில்தான் இறந்திருக்கிறார் என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: யார் சொல்லியும் கழுத்து செயினை கழட்டாத கவுண்டமணி!.. அதில் இருக்கும் ரகசியம் என்ன?..

டேனியல் பாலாஜியை பொறுத்தவரைக்கும் அவருக்கு ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் அந்த இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வெளியே வந்த பிறகு மருதநாயகம் படத்தில் ஒரு யுனிட்டில் புரடெக்‌ஷன் மேனேஜராக பணிபுரிந்தாராம். இருந்தாலும் அவருக்கான வாய்ப்பு சரிவர அமையாததால் அவருடைய நண்பர்கள் சொன்னதின் பேரில் நடிகராக மாறியிருக்கிறார்.

முதன் முதலில் ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகும் அவருக்கு வாய்ப்புகள் வந்ததா என்றால் வரவில்லை. அந்த சமயத்தில்தான் ராதிகாவின் சித்தி சீரியல் டேனியல் பாலாஜியை தேடி வந்திருக்கிறது. சித்தி தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதிலிருந்துதான் டேனியல் பாலாஜியாக மாறியிருக்கிறார்.அந்த தொடர் டேனியல் பாலாஜியை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

இதையும் படிங்க: 2கே கிட்ஸ்களை கவர்ந்த சூப்பர்ஹிட் ரீமேக் படங்கள்…. சொல்லி அடித்த கில்லி

இந்த தொடரின் புகழ் அடுத்ததாக அலைகள் தொடரிலும் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறது. சினிமாவில் நடிக்க வந்த டேனியல் பாலாஜிக்கு தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்ததனால் அந்த இரு தொடர்களோடு சின்னத்திரையை முடித்துக் கொண்டார். அதன் பிறகே கௌதம் மேனன் , வெற்றிமாறன் கண்ணில் பட்டு பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் நடித்த படங்களில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜிக்கு ரசிகர்களின் ஆதரவும் பெருக தொடங்கியது.

 

Related Articles

Next Story