முரளி அந்த விஷயத்துல ரொம்பவே வீக்காம்... பிரபல இயக்குனர் என்னா சொல்றாருன்னு தெரியுமா?
முரளி நல்ல நடிகர். ஆனா குறும்புத் தனம் ஜாஸ்தி. முரளி நடித்த நம்ம வீட்டு கல்யாணம் படத்தை வி.சேகர் இயக்கி இருந்தார். அவர் முரளியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
முரளி நல்ல நடிகன். ஆனா கொஞ்சம் ஜாலி. விளையாட்டுப்பிள்ளை. அந்தக் குறும்புத்தனம் எல்லாம் இருக்கும். நம்ம வீட்டுக் கல்யாணம். இந்தப் படத்துல மீனா, விந்தியான்னு நிறைய பேரு நடிச்சிருப்பாங்க.
இதையும் படிங்க... ரத்னம் பட புரோமோஷனில் இல்லாமல் போன பிரியா பவானி ஷங்கர்… ஏன்? கசிந்த உண்மை..
இந்தப் படத்தோட கிளைமாக்ஸ் ஊட்டில எடுத்துக்கிட்டு இருக்கேன். சூட்டிங் சமயத்துல இவருக்கு பொம்பள வீக்னஸ் இருந்துருக்கு. யாரையோ அப்ரோச் பண்ணியிருப்பார் போல. ஏதோ சிக்கல் வந்த உடனேயே சூட்டிங்ல கடைசி ரெண்டு நாள் எனக்கு உடம்பு சரியில்லன்னு வெளியூருக்குப் போயிட்டாரு. கடைசில ரெண்டு நாள் சூட்டிங் என்னால எடுக்க முடியல. ஒரு வாரம் கழிச்சி வாராரு. ஒரு வாரம் வரைக்கும் ஊட்டில இருக்க முடியுமா?
அது எனக்கு லாஸ் ஆயிடுச்சு. அங்கிருந்து வந்துட்டேன். மறுபடியும் அவரு வந்ததும் ஊட்டியை மேட்ச் பண்ணி பரங்கிமலையில எடுத்தேன். ஒருத்தருக்கு வந்து தண்ணி அடிக்கிறதா இருக்கட்டும். வேற எதுவாகவும் இருக்கட்டும். தொழில்ல இருக்கும் போது அப்படி செய்யக்கூடாது. தண்ணி அடிக்கிறவன் வண்டி ஓட்டும்போது அடிக்கக்கூடாது.
லீவு போட்டு வீட்டுல இருக்கும்போது அடிக்கலாம். இடம், பொருள்னு ஒண்ணு இருக்கு. எம்ஜிஆர், சிவாஜிகூட பலகீனம் இருந்து இருக்கலாம். ஆனால் அந்தத் தொழில் தொழிலா இருப்பாங்க. தொழிலத் தாண்டி என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவாங்க. இதையும் அதையும் கலந்து போட்டு சாப்பிடக்கூடாது.
பாத்ரூம் வேற. பூஜை ரூம் வேற. இரண்டையும் ஒண்ணாக்கிக்கக் கூடாது. திறமை இருந்தும் ஒரு சில நடிகர்கள் இப்படி பாதிக்கப்படுறாங்க. கடைசில முரளி மன்னிப்பு கேட்டாரு. வேற என்ன செய்றது? அனுசரிக்கத் தான் செய்யணும். என்கிறார் பிரபல இயக்குனர் வி.சேகர்.