கார்த்திக் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடித்து பேர் வாங்கிய முரளி! நடிக்காததற்கு இதுவா காரணம்?

Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற பட்டத்தோடு 80களில் இருந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் நடித்து குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்த நாயகனாக வலம் வந்தார்.

அவர் நடித்த பல படங்கள் காதல் கதைகளை மையமாகக் கொண்டு அமைந்ததால் பெண் ரசிகைகள் அவருக்கு அதிகமாக இருந்தனர். ரசிகைகள் மட்டுமல்லாமல் அந்த கால நடிகைகளும் கார்த்திக்கு ரசிகர்களாகவே இருந்தனர். சில நடிகைகள் கார்த்திக் மீது காதலிலும் விழுந்தனர். ஆனால் சமீபகாலமாக கார்த்திக் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: நான் செகண்ட் ஹீரோவா?!.. விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்!..

ஏன் பொது இடங்களில் கூட அவரைப் பார்க்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது யாருக்குமே இதுவரை தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலின் போது தான் அவரை வெளியில் பார்க்க முடிந்தது.அதுவும் நடக்க முடியாமல் திணறிய கார்த்திக்கை பார்த்து என்னாச்சு இவருக்கு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கார்த்திக் நடிக்க வேண்டிய ஒரு கேரக்டரில் முரளி நடித்து பெயர் வாங்கிய ஒரு படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே கார்த்திக், பிரபுதேவா இணைந்து ‘உள்ளம் கொள்ளை போகுதே’ என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். அதேபோல் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘அள்ளித் தந்த வானம்’ திரைப்படத்தில் முதலில் கார்த்திக் தான் நடிக்க வேண்டி இருந்ததாம்.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் என்ட்ரி!.. குக் வித் கோமாளியை ஒரே எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

ஆனால் அந்த படத்தில் முரளி கேமியோ ரோலில் நடித்து அவருக்கு அந்தப் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டியது கார்த்திக்தானாம். ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை. அவர் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதேபோன்று பல திரைப்படங்களை கார்த்திக் தவறவிட்டிருக்கிறார். அதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும் என இந்த தகவலை பகிர்ந்த சித்ரா லட்சுமணன் கூறினார்

 

Related Articles

Next Story