லெஜெண்ட் அண்ணாச்சி பட கதையும் எஸ்.கே 23 கதையும் ஒன்னா? முருகதாஸுக்கு இதே வேலையா?
Legend saravana: தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் ஒரு கதையை இரண்டு இயக்குனர்கள் எடுப்பது என்பது அடிக்கடி நடக்கும். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் இருந்தே இது இருக்கிறது. ஒரு கதையை ஒருவர் உருவாக்கி ஒருவரிடம் சொல்லி அதை அவர் மற்றொருவரிடம் சொல்லி ஒரு உதவி இயக்குனர் மூலம் அந்த கதை ஒரு ஒரு இயக்குனரிடம் போய்விடும்.
கதையின் கரு நன்றாக இருந்தால் அதை டெவலப் செய்து அந்த இயக்குனர் அவரின் ஸ்டைலில் படம் எடுப்பார். அதே கதையை இன்னொருவரின் மூலம் இன்னொருக்கு இயக்குனருக்கு போனால் அதை அவர் அவரின் ஸ்டைலில் வேறு மாதிரி எடுப்பார். இதுபோல பல முறை தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.
பிரவீன் காந்தி இயக்கி பிரசாந்த் - சிம்ரன் நடித்த ஜோடி படத்தின் கதையும், வஸந்த் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடித்து வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் கதையும் ஒன்னுதான். இரண்டு படங்களும் ஒரு மாத இடைவெளியில் வெளியானது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை மற்றொருவரின் கதையை படமாக இயக்கி அதிக சர்ச்சையில் சிக்கியது ஏ.ஆர்.முருகாதஸ்தான்.
அறம் பட இயக்குனர் கோபி நாயனாரின் கதையைத்தான் கத்தி என்கிற தலைப்பில் முருகதாஸ் இயக்கினார் என பலரும் சொல்வதுண்டு. முருகதாஸ் இயக்கிய சர்கார் பட கதைக்கும் இது போலவே பஞ்சாயத்து வந்து எழுத்தாளர் சங்கம் வரை சென்று பாக்கியராஜ் தீர்த்து வைத்தார்.
தற்போது சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் புதிய படமும் இதே சர்ச்சையில் சிக்கியுள்ளது. தர்பார் படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கும் படம் இது. இது சிவகார்த்திகேயனின் 23வது படமாகும். முருகதாஸ் இயக்கத்தில் அப்பா ஆக்ஷன் விருந்தாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணா நடித்து வரும் படத்தின் கதையும், முருகதாஸ் இயக்கி வரும் படத்தின் கதையும் ஒன்றுதான் என திரையுலகில் பேச துவங்கி இருக்கிறார்கள். இது உண்மையா? இல்லையா? என்பது இரண்டு படங்களும் வெளியானால் மட்டுமே தெரியும்.