Categories: latest news

பிரச்சினைகளை தாண்டி மீண்டும் களம் இறங்குகிறார் முருகதாஸ்…! ஹீரோ யாருனு தெரியுமா..?

நம்ம தளபதியின் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். கத்தி, துப்பாக்கி மற்றும் சர்கார் போன்ற தொடர்ச்சியான வெற்றிபடங்களை தெறிக்க விட்டு வசூல் சாதனையும் பெற்று மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.

இதையடுத்து மீண்டும் விஜய்65 படத்தை இவர் தான் இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் தலைவரின் தர்பார் படம் சரியாக ஓடாததால் இந்த பட வாய்ப்பு நெல்சனுக்கு போய் இப்பொழுது பீஸ்டாக மாறியுள்ளது.

இதனால் முருகதாஸின் சம்பள பிரச்சனை ஆரம்பித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு ஹிட் படம் பண்ணியே ஆக வேண்டும் என நெருக்கடியில் இருக்க பல முன்னனி ஹீரோக்களை கேட்டு வந்தார்.ஆனால் எல்லாரும் ஒரு வருடம், இரு வருடம் காத்திருங்கள் என சொல்லி விட்டனர்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமை அணுகியுள்ளார். அவர் தற்போது கோப்ரா படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது முடிந்ததும் பண்ணலாம் என்று கூறியுள்ளாராம். மேலும் முருகாதாஸ் விக்ரமுடன் பண்ணும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by
Rohini