ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ரமணா. இந்த படம் விஜயகாந்தின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அஜித்தை வைத்து
தீனா படத்தை இயக்கிய் அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரமணா இரண்டாவது படமாக அமைந்தது. இரண்டாவது படமே விஜயகாந்தை வைத்து ரமணா போன்ற ஒரு படத்தை கொடுத்ததால் கோலிவுட் முன்னணி இயக்குனராக ஏ.ஆர்.முருகதாஸ் மாறினார்.
அதன் பின்னர்தான் அவர் சூர்யா, விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார்.
இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் ரமணா படம் பற்றி பேசியபோது ‘இந்த படத்தின் கதையை சொல்ல நான் விஜயகாந்த் சார் வீட்டுக்கு போனபோது அவரும், அவரின் மனைவி பிரேமலதாவும் கதையை கேட்டார்கள். கதாநாயகன் சிகரெட் பிடிக்கக்கூடாது.. மது அருந்தக்கூடாது.. குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக்கூடாது.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ சாவது போல காட்சி இருக்க கூடாது என்று சொன்னார் பிரேமலதா. இதில் முதல் இரண்டையும் தவிர மற்ற இரண்டும் படத்தில் இருந்தது.

ஆனாலும் நான் கதையை சொல்ல துவங்கினேன். கதையே சொல்லிக்கொண்டே வந்தேன்.. படத்தில் விஜயகாந்த் சார் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பார். ‘அப்பாவா’ என்று ஷாக்கானர் பிரேமலதா. ‘பிளாஷ்பேக்கிலும் அப்பாவா?’ என்றார். ஆனாலும் கதையை தொடர்ந்து கேட்டார்.
படத்தின் இறுதி காட்சியை சொன்னதும் ‘கிளைமாக்ஸில் ஹீரோ உயிரோடு இருப்பது போல் மாற்றிக் கொள்ளலாமா?’ என்று கேட்டார் அதற்கு விஜயகாந்த் சார் ‘இல்லை.. இந்த கதைக்கு இதுதான் சரியான கிளைமாக்ஸ்’ என சொன்னார். கதையை சொல்லி ரசிகர்களை கன்வின்ஸ் செய்து எப்படி தயார்படுத்துவோமோ அப்படி அவர்களையும் நான் தயார்படுத்தினேன்’ என்று சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.