Cinema History
டைட்டிலில் ரஜினிக்கு போட்ட தெறிமாஸ் பிஜிஎம்..எங்கிருந்து புடிச்சோம் தெரியுமா?… சீக்ரெட் சொல்லும் தேவா..
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி. அபூர்வ ராகங்கள் படம் துவங்கி இப்போது வரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் பல படங்களில் நடித்த பின்புதான் இவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமே கிடைத்தது. வசூலில் சாதனை மன்னனாக இருந்தவர்.
இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் பாட்ஷா திரைப்படம் இவரின் திரை வாழ்வில் கிரீடம் போல் அமைந்த திரைப்படமாகும். இப்படத்தில் அவர் காட்டிய ஸ்டைல், நடிப்பு எல்லாமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இப்போது வரை அப்படத்தை ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஒழுக்கத்திற்கும் ரஜினிக்கும் ரொம்ப தூரம்!..அட இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்டீங்க?.. கரு.பழனியப்பன் ஓபன் டாக்!..
இப்படத்தின் டைட்டிலில் ரஜினி பெயர் வரும்போது போடப்பட்ட பின்னணி இசை ஒரு ட்ரேட்மார்க் இசையாகும். அந்த இசை ரஜினி ரசிகர்களை புல்லரிக்க வைத்தது. அதன்பின் அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்குமே டைட்டிலில் அவர் பெயர் வரும்போது அந்த இசை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இசையை உருவாக்கியவர் அப்படத்தின் இசையமைப்பாளர் தேவா.
இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய தேவா ‘பாட்ஷா படத்தின் டைட்டில் கார்ட்டில் ரஜினி பெயர் வரும் போது போடுவதற்காக பல இசைகளை உருவாக்கினேன். அப்போது அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ‘ ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல முயற்சி செய்யுங்கள்’ எனக்கூறினார்.
அதன் பின்னரே அந்த குறிப்பிட்ட இசையை உருவாக்கினோம். தியேட்டரில் பார்த்தால் அந்த இசை வரும்போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து சந்தோஷப்பட்டனர். இப்போது வரை அது எல்லா ரஜினி படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என அவர் கூறினார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.