ரஹ்மான் ‘சொத்து’ மதிப்பு எவ்ளோன்னு பாருங்க! விவாகரத்து ஆனாலும் ‘கெத்து’ குறையல…

Published on: November 22, 2024
---Advertisement---

இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு சமீபத்தில் அறிவித்தார். இது இந்திய திரையுலகில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. 29 வருடங்களுக்கு பிறகு திருமண பந்தத்தை இருவரும் முறித்து கொள்ளவிருப்பது அவரது ரசிகர்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்குமே சோகத்தை அளித்துள்ளது. இதற்கான காரணத்தினை சாய்ரா பானு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

என்றாலும் பல்வேறு வதந்திகள் இதுகுறித்து உலா வருகின்றன. இந்தநிலையில் ரகுமானின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. 1990ம் ஆண்டு முதலே ரகுமான் இசையமைப்பில் இருக்கிறார்.

இதையும் படிங்க: புஷ்பா 2-வில் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ‘சம்பளம்’ எவ்வளவு தெரியுமா?

அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் என்பதும் குறிபிடத்தக்கது. 35 வருடங்களுக்கும் மேலாக இசைத்துறையில் கோலோச்சி வரும் ரகுமானின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

rahman
rahman

உலகம் முழுவதும் இசை ஸ்டுடியோக்கள், பிளாட்டுகள், சென்னையில் ஆடம்பர பங்களா, விலையுயர்ந்த கார்கள் என அவரின் சொத்து மதிப்பு நீண்டுகொண்டே செல்கிறது. இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியதால் ஹாலிவுட் படங்களும் வரிசை கட்டுகின்றன. இதனால் விமானத்தில் பறந்து, பறந்து இசையமைத்து வருகிறார். ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சிக்கு ரூபாய் 1 கோடியும் பாடல் பாடுவதற்கு ரூபாய் 3 கோடியும் வாங்குவதாக கூறப்படுகிறது.

இவை அத்தனையையும் சேர்த்து அவரின் நிகர சொத்து மதிப்பு ரூபாய் 1728 கோடியாம். இதன் மூலம் உலகின் பணக்கார இசையமைப்பாளர்களில் ஒருவராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். இன்னும் இசையுலகில் பிஸியாகவே இருப்பதால் வருங்காலத்தில் அவரின் சொத்து மதிப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சி அடுத்தக்கட்ட ஷூட்டிங் சுடசுட அப்டேட்… இன்னுமா முடியலை…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.