Cinema History
நீ யார் என கேட்டார் இளையராஜா!.. சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பரணியின் தற்போதைய நிலை!..
இசையமைப்பாளர் பரணியின் ஆரம்ப கால வாழ்க்கை!!..
இசையமைப்பாளர்கள் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது இளையராஜா ஏ ஆர் ரகுமான் மற்றும் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனிருத். இந்த வகையில் இசையமைப்பாளர் பரணி ஒரு நேர்காணலில் தான் இசையில் பயணித்த அனுபவங்களை பற்றி கூறியுள்ளார். அதில் நிறைய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இசையமைப்பாளர் பரணி 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஒரு இசையமைப்பாளர் ஆவார்.இவர் முதல் முதலாக 1999 ஆம் ஆண்டு பெரியண்ணா எனும் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனை அடுத்து 2001 ஆம் ஆண்டு பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தில் தனது சிறப்பான இசையை மக்களிடம் கொடுத்தார். இதனை அடுத்து சார்லி சாப்ளின்,சுந்தரா ட்ராவல்ஸ் எஸ் மேடம் போன்ற திரைப்படங்களில் தனது இசையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்.
இந்த நிலையில் அவர் நேர்காணலில் தான் பயணித்த திரைப்பயணத்தை பற்றி நிறைய சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார், இந்த காலத்து இசை டியூனை விட சவுண்ட் குவாலிட்டி தான் நன்றாக உள்ளது.ஆனால் கேட்பதற்கு இனிமையாக பெரும்பாலும் இசைகள் அமைப்பதில்லை. ஆனால் அந்த காலத்தில் கேட்பதற்கு இனிமையாகவும் மக்கள் மனதை வருடும் நிறைய பாடல்கள் இன்று வரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க- நான் கூப்பிட்டா யாரும் நடிக்க வரமாட்டாங்க!.. எஸ்.ஏ.சிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?..
என்னை யார் நீ என்று கேட்ட இளையராஜா!!..
மேலும் நடுவர் அவர்கள் பரணியிடம் நீங்கள் இளையராஜா அவர்களிடம் ஒருமுறையாவது பேசியது உண்டா என்று கேட்டு இருக்கிறார். அதற்கு எனக்கு ஒரு விழாவில் அவர் பக்கத்தில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் என்னை யார் நீ?? என்று கேட்டார்.நான் இந்தந்தந்த படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்று கூறினேன் ஓ அப்படியா என்று வேறு எதுவும் பேசாமல் இருந்தார். இளையராஜா மாதிரி ஒரு இசையமைப்பாளரை இனி யாராலும் பார்க்க முடியாது. அவர் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று மேலும் அவரைப் பற்றி புகழ்ந்து பேசினார் பரணி அவர்கள்.
இசையமைப்பாளர் பரணியின் தற்போதய நிலை!!..
அவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் மனிதனின் ஒவ்வொரு உணர்வையும் புரிந்து கொண்டு இசையமைத்த பாடல்கள் ஆகும். அதனால் தான் இன்றும் அவர் இசைஞானி என்று அழைக்கப்படுகிறார். மேலும் நடுவர் அவர்கள் நீங்கள் வேறு யாருடைய சப்போர்ட்டும் இன்றி சினிமாவிற்குள் வந்தீர்கள் ஆனால் தற்சமயம் உங்களால் ஏன் இசையமைக்க முடியவில்லை என்று கேட்டார். அதற்கு பரணி அவர்கள் காலத்திற்கு ஏற்றார் போல் இசையை நாம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அந்த இசை பந்தயத்தில் நாம் தோற்றுவிடுவோம்.நீண்ட நாட்கள் இசையமைத்த இளையராஜாவும் தற்காலத்திற்கு ஏற்றவாறு இசையை கொடுக்க முடியவில்லை.
அதேபோல நானும் தற்காலத்திற்கு ஏற்றவாறு இசையை கொடுக்க தவறிவிட்டேன். ஆனால் இப்பொழுது அதை உணர்ந்து கொண்டு திரைப்படங்களில் பணியாற்ற தயாராக உள்ளேன் நான் மீண்டும் ஒரு கம்பேர் கொடுப்பேன் என்று கூறினார்.
இதையும் படிங்க- நான் கூப்பிட்டா யாரும் நடிக்க வரமாட்டாங்க!.. எஸ்.ஏ.சிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?..