Connect with us

அந்த சம்பவம் மட்டும் நடக்கலைனா கீரவாணி சினிமாவிற்கே வந்திருக்க மாட்டார்!..

Cinema News

அந்த சம்பவம் மட்டும் நடக்கலைனா கீரவாணி சினிமாவிற்கே வந்திருக்க மாட்டார்!..

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் துவங்கி அனைத்து இடங்களிலும் பிரபலமாக பேசப்படுபவர் இசையமைப்பாளர் கீரவாணி. தொடர்ந்து ராஜமெளலி திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த கீரவாணி தற்சமயம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு கூத்து பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.

கீரவாணி தமிழ் சினிமாவில் மரகதமணி என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் பல பாடல்களை இசையமைத்துள்ளார். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரானதற்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. இயக்குனர் பாலச்சந்தர்தான் தமிழ் சினிமாவில் கீரவாணியை அறிமுகப்படுத்தினார்.

அதற்கு முன்பு பாலச்சந்தர் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாதான் இசையமைத்து கொடுத்தார். சிந்து பைரவியில் துவங்கிய இந்த காம்போ பல படங்களில் நீடித்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பாலசந்தர் ஒரு சமயம் தனது உதவி இயக்குனரை அழைத்து இளையராஜாவை பார்த்து வர அனுப்பினார்.

உதவி இயக்குனர் செய்த தவறு

அப்போது இளையராஜாவை பார்க்க சென்ற உதவி இயக்குனர் நேராக ஸ்டுடியோவிற்குள் சென்றுவிட்டார். பொதுவாக யார் ஸ்டுடியோவிற்குள் வந்தாலும் அது இளையராஜாவிற்கு பிடிக்காது. ஆனால் அது அந்த உதவி இயக்குனருக்கு தெரியாது.

எனவே கோபமடைந்த இளையராஜா, அந்த உதவி இயக்குனரை வெகுநேரமாக வெளியிலேயே நிற்க வைத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இயக்குனர் பாலச்சந்தர் நேராக ஸ்டுடியோவிற்கு வந்த அந்த உதவி இயக்குனரை அழைத்து சென்றார். இளையராஜாவின் இந்த செய்கைக்கு பழி வாங்க ஒரு புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த நினைத்தார் பாலச்சந்தர்.

அப்போதுதான் நடிகர் மம்முட்டி நடிப்பில் அழகன் என்கிற திரைப்படத்தை பாலச்சந்தர் இயக்கி வந்தார். அந்த படத்திற்கு இசையமைக்க கீரவாணியை அழைத்தார். கீரவாணி அவரது மற்றொரு பெயரான மரகதமணி என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top