பத்தாண்டுகளில் தமிழ்த் திரை உலகை தெறிக்க விட்ட இளம் இசை அமைப்பாளர் இவர் தான்...!
ஒய் திஸ் கொலவெறி தான் இவரது முதல் பாடல். கோடிக்கணக்கான பார்வையாளர்களை அள்ளியது.
பத்து ஆண்டுகளில் இளைஞர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்து விட்டார் அனிருத். கமல், ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், விஜய்சேதுபதி என முன்னணி நடிகர்களின் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர் இவர் தான். இவர் பாடலைக் கேட்டதுமே யாருப்பா இசை அமைப்பாளர் என்று தான் கேட்டனர். பிஜிஎம் என்றால் என்ன என்பது இவரது வருகைக்குப் பிறகு தான் தெரியவந்தது.
3 பட பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என தனது பூஸ்ட் பாடல்கள் மூலம் இசை உலகில் புது டிரெண்டை உருவாக்கினார். 2014ல் வேலை இல்லா பட்டதாரி பாடல்கள் செம ஹிட்.
இதில் தனுஷ்க்கு போட்ட பிஜிஎம் அசத்தியது. பின்னணி இசையுடன் இவர் பாடும் பாடல் தெறிக்க விட்டது. இந்தப்படத்தில் வந்த அம்மா சென்டிமென்ட் பாடல் நம்மை எங்கோ கூட்டிச் சென்றது. தாய்ப்பாசத்தை இதை விட மேலாக யாரும் சொல்ல முடியாது. அது தான் அம்மா அம்மா பாடல். செம சூப்பர்.
மான் கராத்தே படத்திலும் இவரது பாடல்கள் மாஸ் ஹிட்டாயின. தொடர் வெற்றிகள் விஜய் படத்தின் கத்தி பட வாய்ப்பைக் கொண்டு சேர்த்தது. இதில் வரும் பிஜிஎம் அனிருத்தின் பெயரை சொன்னது. அடுத்து மாரி படத்திற்கு வந்தார்.
காக்கிசட்டை, தங்கமகன், நானும் ரௌடிதான் என இவரது படங்கள் அனைத்துமே செம மாஸ். மெலடி பாடல் என்றாலும் சரி. குத்துப் பாடல் என்றாலும் சரி. இவருடையது என்றாலே போதும். இளம் ரசிகர்களின் தேசிய கீதமாக மாறிவிடுகிறது.
ஆலுமா டோலுமா என்ற பாடல் அஜீத்திற்குக் கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார். வலிமை படத்திலும் இவரது பாடல்கள் அனல் பறந்தன.
ரெமோ, வேலைக்காரன், கோலமாவு கோகிலா, தானா சேர்ந்த கூட்டம் என தமிழ்சினிமா உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். சுடக்கு மேல சுடக்கு போடுது என்ற பாடல் இளைஞர்களைக் குத்தாட்டம் போட வைத்தது.
2019ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்டையில் ஒன்று சேர்ந்து இளம் ரசிகர்களையும் ரஜினியுடன் ஆட்டம் போட வைத்தது. மரணம் மாசு மரணம் டப்பு தரணும்...தட்றாங்க நாங்க பாடல் முறைப்பான ஆட்டம் போட வைத்தது. அடுத்தும் தர்பாரில் பாடல்களால் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு இவர் போட்ட வாத்தி பாடல் செம தூள். டாக்டர் படத்திலும் செல்லம்மா செல்லம்மா பாடல் குட்டி குட்டி ரசிகர்களையும் கூட ஆட்டம் போட வைத்தது. அது என்னமோ தெரியல. என்ன மாயமோ தெரியல. இவருடன் சிவகார்த்திகேயன் சேர்ந்தால் பாட்டு தூள் தான்.
பீஸ்ட் படத்தில் வந்த அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல் யு டியூப்பில் பெரும் சாதனை படைத்தது. ஏஆர் ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய மெர்சலாயிட்டேன் என்ற பாடல் இன்னும் நம்மை மெர்சலாக்கிக் கொண்டு இருக்கிறது.
2012ல் அறிமுகமான இவர் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டு மழையால் நனைந்து கொண்டு இருக்கிறார். இவர் ஒரு ஆல் டைம் மாஸ். குட்டி ஸ்டோரி, சும்மாவே சிரிக்கிறா, பொண்ணு மாப்பிளையை பாரு, அம்சமா அழகா ஒரு பொண்ணப் பார்த்தேன், பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல மத்தளம் அடிறா டேய்...என விக்ரம் படத்தில் இவர் காட்டிய மாஸைக் கண்டு உலகே அண்ணாந்து பார்த்தது.
மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற தனுஷின் மெலடி பாடல் மரண ஹிட். ரொமான்டிக் மெலடிகள், குத்தாட்டம் என இவரது பாடல்கள் எந்த ஜானரானாலும் அடிச்சி தூள் கிளப்பும் என்பது மட்டும் நிச்சயம்.