ஏன்ப்பா அதெல்லாம் நான் போட்ட பாட்டுதான்ப்பா!.. தேவாவிற்கு இந்த நிலைமையா?.. லண்டனில் மூக்கறுபட்ட தேனிசை தென்றல்..
தமிழ் துரையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி எதாவது ஒரு பட்டம் கொடுத்து அவர்களை பறைச்சாற்றுவது வழக்கம். நடிகர்கள், நடிகைகளுக்கும் மட்டுமில்லாமல் இசைத்துறையில் பணியாற்றும் இசையமைப்பாளர்களுக்கும் அந்த மாதிரி பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இளையராஜாவிற்கு இசைஞானி, ரஹ்மானிற்கு இசைப்புயல், அனிருத்திற்கு ராக் ஸ்டார் என வழங்கப்பட்டது போல இசையமைப்பாளர் தேவாவிற்கும் எம்.எஸ்.வியால் வழங்கப்பட்ட பெயர் தான் தேனிசை தென்றல். அவருக்கு அப்பெயர் கொடுக்கப்பட்ட
ராசியோ என்னவோ 90களில் தேவாவின் கொடியும் பறக்கத் தொடங்கியது.
பெரிய படைப்பான கவிதாலயா இளையராஜாவிடமிருந்து விலகி இப்போது ஆஸ்கார் நாயகனான கீரவாணியுடன் சேர்ந்து படங்களை செய்து கொண்டிருந்தது. ஆனால் அவர் இசையமைத்த படங்களான அழகன், வானமே எல்லை போன்ற படத்தில் அமைந்த பாடல்கள் ஹிட் ஆனாலும் அவை வெளியில் பிரபலமாகவில்லை.
அதன் பிறகு தான் தேவாவை அழைத்தார் பாலசந்தர். அதுவும் ரஜினியோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் ‘அண்ணாமலை’. அதுவரை எந்த ஹீரோவுக்கு இல்லாத ஒரு அங்கீகாரத்தை தன் இசையின் மூலம் ரஜினிக்கு கொடுத்தார் தேவா. முதன் முதலில் கதாநாயகனுக்காக ஓப்பனிங் சாங் என்ற முறையை தேவா தான் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
அண்ணாமலையின் ஹிட் எக்குதிக்கும் பரவியது. தொடர்ந்து ரஜினியின் பாட்ஷா படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து தேவாவை வானளவு பார்க்க வைத்தது. கானா மட்டுமே தேவாவிற்கு உரிய முறையாக இருந்ததை விஜய் ,அஜித் படங்களின் மூலம்
மாற்றியவர் தேவா.
வாலி, நேருக்கு நேர், குஷி, முகவரி, போன்ற படங்களுக்கும் தேவா தான் இசையமைப்பாளர். இந்தப் படங்களில் அமைந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ ரஹ்மான், அனிருத் போன்ற இசையமைப்பாளரில் யாரோ ஒருவர்தான் இசையமைத்திருக்க வேண்டும் என்பது போல இருக்கும். ஆனால் தேவாவின் இசையில் வெளிவந்த படங்கள் தான் அது.
லண்டனில் ஒரு கச்சேரிக்கு போக தயாராகி கொண்டிருந்தாராம் தேவா. கச்சேரி கமிட்டியிலிருந்து எந்த எந்த பாடல்கள் பாடப் போகிறீர்கள் என கேட்பது வழக்கமாம். உடனே தேவா வாலி, முகவரி, குஷி, நேருக்கு நேர் போன்ற படங்களில் அமைந்த தன் பாடல்களை லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்.
அதற்கு அவர்கள் ‘ஏன் மற்றவர்கள் போட்ட பாடலை பாடுகிறீர்கள்? நீங்கள் இசையமைத்த பாடல்களை பாட வேண்டியது தானே?’ என்று கேட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த தேவா ‘இந்த மாதிரி நிறைய படங்கள் நான் இசையமைத்துதானா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கத்தான் செய்கிறது’ என்று கூறினார்.
இதையும் படிங்க : சத்யராஜுக்காக சிபாரிசு செய்தேன்!.. கடைசில சீரியலுக்கு வந்ததுதான் மிச்சம்!.. புலம்பும் சிவக்குமார்..