திருமணத்தில் வித்தியாசமான நிபந்தனை போட்ட பிரபல இசையமைப்பாளர்!. விழுந்து விழுந்து சிரித்த சம்பவம்..

ramanathan
தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா,எம்ஜிஆர்,சிவாஜி போன்ற பெரிய ஜாம்பவான்களின் படங்களுக்கு இசையமைத்து இசையில் கொடிகட்டி பறந்தவர் தான் ஜி. ராமநாதன்.
தன் அண்ணன் நடத்திய கச்சேரிகளில் முதலில் ஹார்மோனியம் வாசிக்கத் தொடங்கியவர் ஹார்மோனியம் வாசிப்பதில் வல்லவராக விளங்கினார். பல நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசித்திருக்கிறார் ராமநாதன்.
பம்மல் சம்பந்த முதலியார் ‘காலவ ரிஷி’ என்ற நாடகத்தை 1932 ஆம் ஆண்டு படமாக எடுக்கப்பட்ட போது அதற்கு பின்னனி இசை சேர்க்கும் பணியில் சேர்ந்தார் ஜி.ராமநாதன். அது தான் அவரின் முதல் சினிமா வாய்ப்பு. அது வரைக்கு குழுவாக வாசித்துக் கொண்டிருந்தவர் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சத்யசீலன்’ என்ற படத்தில் தனித்து வாசிக்கக் கூடிய இசையமைப்பாளராக உயர்ந்தார்.

mgr chinna chinna payale
எனினிலும் ராமநாதனை ஒரு திறம்பட இசையமைப்பாளர் எனக் காட்டிய திரைப்படம் பி.யு.சின்னப்பா இரட்டை வேடங்களில் கலக்கிய ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம். இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து மாடர்ஸ் தியேட்டர்ஸின் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார்.
இவர்களை அடுத்து அடுத்த தலைமுறை நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கும் இசையமைத்தார். ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’, ‘வாராய் நீ வாராய்’ போன்ற பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் ராமநாதன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே திருமணமாகி விட்டதாம்.
இதையும் படிங்க : கொஞ்சம் லேட் பிக் அப்…அவ்ளோதான்… கடைசியில் அடிச்சு தூக்கியது நாயகன்…! அசந்து போன ரஜினி!
அவருடைய மனைவி பெயர் ஜெயலட்சுமி. ராமநாதன் பெண் பார்க்க சென்ற போது பெண்ணை பாடச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் பள்ளியில் பாடிய ஒரு பாடலை பாடியிருக்கிறார். அப்போது ராமநாதன் ஒரு ஹார்மோனியத்தை எடுத்து வரச் சொல்லி கிட்டத்தட்ட 6 மணி நேரம் வாசித்தாராம்.
அந்த கச்சேரி முடிந்ததும் பெண் பிடித்துப் போக திருமணம் நடக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை என்று ராமநாதன் கூறினாராம். எல்லாரும் என்ன என கேட்க ‘திருமணத்திற்கு பிறகு பெண் பாடக் கூடாது’ என சொன்னாராம். அதை கேட்டதும் அங்கு இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். அந்த அளவுக்கு இருந்திருக்கிறது போல அவர் பாடியது. இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.