எம்.ஜி.ஆருக்கு பாடிய இளையராஜா.. டிராப் ஆன திரைப்படம்... அட இது தெரியாம போச்சே!..
திரையுலகில் ஆச்சர்யமான சம்பவங்கள் எப்போதும் அதிகம் நடக்கும். ஆனால், சில விஷயங்கள் பல வருடங்கள் கழித்தே வெளியே தெரியவரும். சம்பந்தப்பட்டவர்கள் வெளியே சொல்லவில்லை எனில் தெரியாமலே கூட போய் விடும். அதேபோல், திரையுலகில் ஏராளமான முக்கிய படங்கள் கூட சில காரணங்களால் கைவிடப்பட்டும். பின்னாளில் கேள்விப்படும்போது ‘இட இது நடந்திருக்கலாம்’ என நமக்கு தோணும். இது போன்ற ஒரு விஷயத்தைதான் இங்கே பார்க்கப்போகிறோம்..
நடிகர் எம்.ஜி.ஆர் முதல்வாரன பின் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘உன்னை விட மாட்டேன்’ என்கிற படமும் ஒன்று. இப்படத்திற்கு மறைந்த கவிஞர் வாலி கதை, வசனம், பாடல்கள் எழுதினார். அன்னக்கிளி பட பாடல்களை கேட்ட எம்.ஜி.ஆர் இளையராஜாவையா இசையமைப்பாளராக போட்டு விடுங்கள் எனக்கூற அவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் உருவானது. எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களை பாடிய டி.எம்.சௌந்தரராஜன் பாட அந்த பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. எனவே, மலேசியா வாசுதேவனை வைத்து அப்பாடலை பதிவு செய்தார் இளையராஜா. ஆனால், எம்.ஜி.ஆருக்கு அதுவும் திருப்தி இல்லை. எனவே, இளையராஜாவே அப்பாடலை பாட எம்.ஜி.ஆருக்கு அப்பாடல் பிடித்துப்போனது.
ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. அப்படம் மட்டும் வெளியாகியிருந்தால் எம்.ஜி.ஆர் படத்திற்கு இசையமைத்த பெருமை இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிங்க : 80ஸ் கிட்டுகளை அலற விட்ட நடிகர் யாருன்னு தெரியுமா? இப்ப பார்த்தாலும் வியர்க்கும்..!