இளையராஜாவுக்கு காப்பி ரைட்ஸ் மட்டும் மாதம் இவ்வளவு கோடி வருதா?!.. அடேங்கப்பா!..

by சிவா |   ( Updated:2024-06-25 13:58:41  )
இளையராஜாவுக்கு காப்பி ரைட்ஸ் மட்டும் மாதம் இவ்வளவு கோடி வருதா?!.. அடேங்கப்பா!..
X

தனது பாடல்களை தனது அனுமதியுடன் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன் என இசைஞானி சில வருடங்களுக்கு முன்பே சொல்ல துவங்கிவிட்டார். இது ரசிகர்கள் பலருக்கும் பிடிக்காமல் போகலாம். அவரை திட்டவும் செய்யலாம். ஆனால், அவர் அப்படி கேட்டதற்கு பின்னணியில் பல கோடி வருமானம் இருக்கிறது.

80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களைத்தான் இப்போது 40 வயதுக்கு மேற்பட்டோர் கேட்டு ரசித்து வருகிறார்கள். பாடல்களை கேட்க பல மொபைல் ஆப் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது. வெப்சைட்டுகளில் இருந்து ராஜாவின் பாடல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரு பாடல் உருவாகும்போது இசையமைப்பாளருக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்துவிடுகிறார். ஆனால், காப்புரிமையை அந்த இசையமைப்பாளர் வாங்கிவிட்டால் அந்த பாடலை வியாபார ரீதியாக யார் பயன்படுதினாலும் அந்த இசையமைப்பாளரிடம் அனுமதி பெறுவதோடு, அவர் கேட்கும் தொகையை கொடுக்க வேண்டும்.

இளையராஜாவும் அப்படி தான் இசையமைத்த பல பாடல்களுக்கு காப்புரிமை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த உரிமையில்தான் அவர் கேட்கிறார் என சொல்கிறது திரையுலகம். ‘ஒரு சின்ன இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு 10 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு போட்ட பாடல்களுக்கு காப்புரிமை தொகையாக அவருக்கு கிடைத்த பணம் 40 லட்சம். அப்படி பார்த்தால் இளையராஜாவுக்கு காப்புரிமை தொகை மட்டும் மாதம் 10 கோடி வரும்’ என்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

ilayaraja

ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் இசையமைக்க துவங்கியது முதலே தான் இசையமைக்கும் பாடல்களுக்கு காப்புரிமை வாங்கிவிட்டார். அதன் மூலம் அவருக்கு பல கோடிகள் வருமானமாக கிடைக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அவருக்கு மட்டுமல்ல பல இசையமைப்பாளர்களுக்கும் அப்படி பணம் கிடைத்து கொண்டு இருக்கிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஜீவ நாடியே ‘கண்மணி அன்போடு காதலன்’ என்கிற பாடல்தான். அந்த பாடலில்தான் படம் துவங்கும். அந்த பாடலில்தான் படமும் முடியும். 20 கோடி போட்டு 250 கோடியை எடுத்துவிட்டார்கள். அதனால்தான் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story