தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். நடிகராக மட்டுமல்லாமல் கார் ரேஸராகவும் இருந்து வருகிறார். தற்போது கூட மலேசியாவில் நடக்கும் கார் பந்தயத்தில் தன்னுடைய அணியினருடன் தீவிரமாக போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே கார் ரேஸ் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். ஆனால் தன்னுடைய சினிமா கெரியரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு போக வேண்டும், அதே சமயம் தன்னுடைய பேஷனான கார் ரேஸிலும் ஒரு திறமை மிகு போட்டியாளராக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார் அஜித்.
முதலில் சினிமாவில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்தினார். ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தப்படியான நிலையில் அஜித் மாறினார். உலகெங்கிலும் அவருக்கு என ரசிகர் பட்டாளம் ஏராளம். பணம் பேர் புகழ் என எல்லாவற்றையும் சம்பாதித்த பிறகு இந்த வயதிலும் தன்னுடைய பேஷனான கார் ரேஸையும் விடவில்லை. தனக்கென ஒரு தனி அணியை உருவாக்கிய அஜித் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்டு தன்னுடைய அணியினருடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
அதன் பிறகு தொடர்ந்து பல போட்டிகளில் கலந்துகொண்டு தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார் அஜித். பொது இடங்களில் பார்க்க முடியாது, சகஜமாக யாரிடமும் எளிதாக பேச மாட்டார், எந்த ஒரு பேட்டியும் கொடுக்க மாட்டார் என்பதை சமீப காலமாக உடைத்து வருகிறார். அதுவும் கார் பந்தயத்திற்கு பிறகு ஆங்கில பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது, ரசிகர்களுடன் அவ்வப்போது போட்டோ எடுப்பது, பொது இடங்களில் அவரை காண்பது என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சி எஸ் அஜித்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் மூணாறில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். அப்போது அங்கு சாம் சிஎஸ் படித்துக் கொண்டு இருந்தாராம். அஜித் மனிதர்களிடம் பழகும் விதம் வேறு மாதிரியாக இருந்தது, மனுஷங்களை அவர் மதிக்கிற விதமும் வேறு மாதிரியாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவர் பழகும் விதத்தில் எந்த ஒரு நடிப்பையும் பார்க்க முடியாது. மிகவும் எதார்த்தமாகவே பழகினார். அவருடைய பர்சனாலிட்டியே வேறு மாதிரியாக இருந்தது. எல்லாருக்கும் அவர் ரோல் மாடல். ஒருத்தரால் நடித்து பழக முடியாது. பேரு புகழ் ஒருத்தரின் கண்ணை மறைக்கும். ஆனால் இன்னமும் அஜித் அப்படியேதான் இருக்கிறார். எனக்கு பர்சனலாகவே அவரை ஏன் பிடிக்கும் என்றால் நான் ஜீரோவில் இருந்து வந்தவன். அதைப் போல அஜித்தும் ஜீரோவில் இருந்து தான் அவருடைய வாழ்க்கையை ஆரம்பித்தார் என சாம் சி எஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
