தமிழ்சினிமாவில் சக்கை போடு போட்ட முத்து முத்தான படங்கள் - ஒரு பார்வை
ஒரு காலத்தில் முத்தான முத்தல்லவோ என்று எம்ஜிஆர் பாடல் ஒன்று செம மாஸாக இருந்தது. கண்ணே...கனியே...முத்தே, மணியே நீ வா..முத்தே முத்தம்மா முத்தம் ஒண்ணு தரலாமா, முத்து மணி மாலை என பாடல்களை ஆராய்ந்தாலும் முத்து முத்தாக தான் வார்த்தைகள் வந்து விழுகின்றன. இந்தப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே போனால் அது இனிய பயணம் ஆக அமையும். அதே போல் படங்களும் தன் பங்கிற்கு முத்துக்களை அள்ளி வீசுகின்றன. இவற்றில் ஒரு சில படங்களை இங்கு காணலாம்.
முத்துக்கு முத்தாக
ராசு மதுரவன் இயக்கிய இந்தப்படத்திற்கு கவி பெரிய தம்பி இசை அமைத்துள்ளார். உறவுகளும், சிக்கல்களும் என அமைந்து வரும் இந்தப் படத்தில் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உறவுகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளன.
இளவரசு, சரண்யா பொன்வண்ணன், நடராஜ், பிரகாஷ், விக்ராந்த், வீரசமர், ஹரிஷ், ஓவியா, சிங்கம்புலி, காயத்ரி, ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர். என்ன பண்ணி தொலச்ச, என்னரா நீ என்னரா, காத்தடிச்ச உள்பட பல பாடல்கள் உள்ளன.
முத்து
1995ல் வெளியான இந்தப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினிகாந்த் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
ஜப்பானில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குலுவாலிலே, தில்லானா தில்லானா, ஒருவன் ஒருவன், கொக்கு சைவ கொக்கு, விடுகதையா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
முத்து எங்கள் சொத்து
1983ல் வெளியான இப்படத்தில் ஜி.என்.ரங்கராஜன் திரைக்கதை, எமுதி இயக்கிய படம். பிரபு, ராதா, ராஜீவ், மனோரமா, வனிதா, பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். நீ என்ன, நான் உந்தன், யாராரு உள்பட பல பாடல்கள் உள்ளன.
முரடன் முத்து
1964ல் வெளியான படம் முரடன் முத்து. பி.ஆர்.பந்துலு இயக்கிய வெற்றிப்படம் இது. சிவாஜிகணேசன், தேவிகா, அசோகன், சந்திரகாந்தா, வி.கே.ராமசாமி, பிரேம்நசீர், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்துள்ளார்.தாமரப்பூ குளத்திலே, கல்யாண ஊர்வலம், பொன்னாசை கொண்டவர்க்கு, சிரிக்கின்ற முகத்தை உள்பட பல பாடல்கள் உள்ளன.