படத்தின் ஹீரோ முத்துராமன்!..கட் அவுட் தேங்காய் சீனிவாசனுக்கு!..கோபத்தில் நம்ம ஹீரோ என்ன செய்தார் தெரியுமா?..
அந்த கால சினிமாவில் மங்கைகளுக்கு கல்லூரி பெண்களுக்கு பிடித்த இயக்குனர் யாரென்றால் அது ஸ்ரீதர் தான். இவரின் இயக்கத்தில் ஏகப்பட்ட காதல் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. குறிப்பாக பெருமளவும் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம்.
இதனாலேயே இளசுகளிம் மனதில் ஆழமாக பதிந்தார் ஸ்ரீதர். இவரிடம் உதவியாளராக கதாசிரியராக இருந்தவர் சித்ராலயா கோபு. இவரின் இயக்கத்தில் காசேதான் கடவுளடா நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதைப் பார்த்த மெய்யப்பச்செட்டியார் அதை படமாக்க விரும்பினார். அந்த நாடகத்தில் நாயகனாக இருந்தார் நடிகர் முத்துராமன்.
இதையும் படிங்க : “இனி எந்த படமும் ரிலீஸ் கிடையாது”… உஷார் ஆகும் ஓடிடி நிறுவனங்கள்… என்ன காரணம் தெரியுமா?
மேலும் அந்த நாடகம் படமாக்கப்பட்ட போது முத்துராமன் படத்திலயும் நடித்தார். அந்த சாமியார் வேடத்திற்கு ஆள் தேடிக் கொண்டிருந்த போது தான் தேங்காய் சீனிவாசன் தென்பட அவரையே பயன்படுத்திக் கொண்டனர். மேலும் மெட்ராஸ் பாஷையில் தேங்காய் சீனிவாசன் பேசும் வசனங்கள் திரையரங்கை அனல் பறக்க வைத்தன. இதை தியேட்டரில் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் மெய்யப்பச்செட்டியார் தேங்காய் சீனிவாசனுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து தியேட்டர் முன் தேங்காய் சீனிவாசனின் பெரிய கட் அவுட்டை வைத்தாராம்.
இதை பார்த்த தேங்காய் சீனிவாசன் மகிழ்ச்சியில் படத்தின் இயக்குனரான சித்ராலயா கோபுவை சந்தித்து ஒரு பட்டு வேட்டி சட்டையை அன்பளிப்பாக கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாராம். அதே நேரத்தில் தேங்காய் சீனிவாசன் போன வேகத்தில் சித்ராலயா கோபுவை சந்திக்க முத்துராமன் வந்திருக்கிறார். பெரும் கோபத்துடன் வந்த முத்துராமன் ‘இந்த படத்தில் நான் தான் ஹீரோ, ஆனால் ஒரு காமெடி நடிகனுக்கு போய் கட் அவுட் வைத்துள்ளீர்கள். இதை பார்க்கும் என் ரசிகர்கள் என்னை பற்றி என்ன நினைக்க மாட்டார்கள்’ என கத்தினாராம். இதை புரிந்து கொண்ட சித்ராலயா கோபு இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வசூலுக்காக மெய்யப்பச்செட்டியார் இப்படி செய்திருக்கிறார் என சமதானம் செய்து அனுப்பி வைத்தாராம்.