சிவாஜிக்கான விருதை தட்டிச் சென்ற முத்துராமன்!.. சண்டை போட்டு வாங்கிக் கொடுத்த பிரபலம்!..
தமிழ் சினிமாவில் வழக்கம் போல இருக்கும் சினிமாவிற்கு சற்று மாறுதலாக வேறொரு கோணத்திற்கு சினிமாவை கொண்டு போக வேண்டும் என்ற முனைப்பில் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இயக்குனர் ஜெயபாரதி. கமெர்சியல் படங்கள் மீதே ரசிகர்களின் பார்வை போக அவர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்க பல முயற்சிகள் எடுத்திருக்கிறார்.
எடுத்தது 7 படங்கள் ஆனாலும் எடுத்தவை எல்லாமே கமெர்சியலுக்கு அப்பாற்பட்டவை. அதனாலேயே ஜெயபாரதியை அந்த அளவுக்கு பரீட்சையமில்லாமல் போயிருக்கலாம். கலைப்படங்களை இயக்குவதிலேயே ஆர்வம் உள்ளவராக விளங்கினார் ஜெயபாரதி.
அவர் முதன் முதலில் இயக்கிய படம் ‘குடிசை’. ஆனால் அந்த திரைப்படம் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. உள்கருத்துக்கள் நன்றாக இருந்த போதிலும் சமுதாயத்தில் வித்தியாசமான பார்வையுடன் ஒருவன் வருகிறான் என்றாலே அவனை அந்த சமூகமே வித்தியாசமாகத்தானே பார்க்கும்.
அதே நிலைமை தான் ஜெயபாரதிக்கும். ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். சினிமாவில் அவருக்கு மிகவும் ஈர்க்கப்பட்ட நடிகராக முத்துராமனை கூறினார். ஒரு சமயம் ஏதோ ஒரு படத்தை பார்ப்பதற்காக இரவுக் காட்சிக்காக முத்துராமனும் அவரது மனைவியும் திரையரங்கிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது அருகில் ஜெயபாரதி. பார்த்ததும் மெய்சிலிர்த்து விட்டு தன்னை அறிமுகப்படுத்தியவர்,
உடனே முத்துராமன் குடிசை திரைப்படத்தை பற்றி கேட்டு நாளை என் வீட்டிற்கு வாருங்கள் என்று சொன்னாராம். இவரும் முத்துராமன் வீட்டிற்கு போக குடிசை திரைப்படத்திற்கு பிறகு ஏன் திரைப்படங்களை இயக்க வில்லை என்று கேட்டாராம். மேலும் ஏதாவது இயக்க எண்ணம் இருந்தால் உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினாராம் முத்துராமன்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ஃப்லிமாலயா சார்பில் வருடந்தோறும் சிறந்த நடிகர் , நடிகைகளுக்கான விருதை அறிவிக்கும் நிறுவனம் ஒன்று எப்போதும் சிவாஜிக்கே அந்த விருதை கொடுத்து வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு வருடம் அந்த விருதை சண்டை போட்டு நடிகர் முத்துராமனுக்கு வாங்கிக் கொடுத்தாராம் ஜெயபாரதி. அதை பார்த்து முத்துராமன் அழுது விட்டாராம்.
இதையும் படிங்க : சென்னையில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்கனும்ன்னா மும்பைக்கு மெசேஜ் அனுப்பனுமாம்!… ஒரே குழப்பமா இருக்கேப்பா??
அதன் பின் வீட்டிற்கு வரச் சொல்லி ஜெயபாரதியிடம் ‘ஏன் சிவாஜி மட்டும் தான் நடிகரா? அவரும் ஒரு நல்ல நடிகர் தான். நானுன் நன்றாக நடிக்கக் கூடியவன் தானே? ஏன் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டிக்கிறார்கள்’ என்று முத்துராமன் வருத்தப்பட்டாராம். இதை ஒரு பேட்டியில் ஜெயபாரதி கூறினார்.