மை டியர் பூதம் மூசா இது… இப்படி எப்படி இருக்கார்னு பாருங்க – ஷாக்கான 90ஸ் கிட்ஸ்!

Published on: July 24, 2022
my dear bootham dp
---Advertisement---

2004ம் ஆண்டின் துவக்கத்தில் ஒளிபரப்பானா செயல்களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருந்ததில் ஒன்று மை டியர் பூதம் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும். இதை வீடுகள் தோறும் உள்ள குழந்தைகள் பள்ளியில் இருந்து ஓடி வந்து கண்டுகளிப்பார்கள்.

இந்த சீரியலில் மூசா தனது நண்பர்களை ஆபத்து காலத்தில் தனக்கிருக்கும் விசித்திர சக்தியால் காப்பாற்றுவார். மேலும் குழந்தைகளுக்கு பிடித்தமான சொல்வதை செய்யும் மூசாவின் சுட்டித்தனம் தான் இந்த சீரியலின் கதை.

கிட்டத்தட்ட 900 எபிஸோடுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்த இந்த சீரியலில் மூசா கேரக்டரில் அபிலாஷ் என்பவர் நடித்திருந்தார். இவர் மைடியர் பூதம் சீரியலை தவற வீட்டுக்கு வீடு லூட்டி, விக்ரமாதித்யன், மகள், கோகுலத்தில் சீதை, அபிராமி, கொடி முல்லை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

my dear bootham
my dear bootham

இதையும் படியுங்கள்: இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருப்போம்!….கவர்ச்சி உடையில் காத்து வாங்கும் அம்ரிதா…

மேலும், திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த அபிலாஷ் தற்போது ஹீரோவாகவும் நடித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில் அபிலாஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவா நம்ம மூசா என 90ஸ் கிட்ஸ் இந்த புகைப்படத்தை ஷாக்கிங்குடன் ஷேர் செய்து வருகின்றனர்.