More
Categories: Cinema History Cinema News latest news

இந்தியாவின் முதல் 3டி படம் மைடியர் குட்டிச்சாத்தான்

தற்போது குழந்தைகள் பொழுது போக்க எத்தனையோ விசயங்கள் வந்து விட்டன. சொல்லப்போனால் அனைத்து குழந்தைகளும் மொபைல் மொபைல் என்றே கிடக்கின்றனர் மொபைலில் வீடியோ பார்ப்பது, மொபைல் கேம்கள் விளையாடுவது என பொழுதை கழிக்கின்றனர். மேலும் டிவிக்களிலும் சுட்டி டிவி உட்பட நிறைய கிட்ஸ் சேனல்கள் வந்து விட்டன.

 

Advertising
Advertising

இந்த நிலையில் அந்தக்காலத்தில் இதெல்லாம் இல்லாத காலத்தில் குழந்தைகளை டார்கெட் செய்து களமிறக்கப்பட்ட படம்தான் மைடியர் குட்டிச்சாத்தான்.

கேரளாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான நவோதயா அப்பச்சன் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

கடந்த 1984ம் வருடம் ஆகஸ்ட் 24ம்தேதி இப்படம் ரிலீஸ் ஆனது.

ஜிஜோ புன்னூஸ் இப்படத்தை இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இப்படம் வெளியிடப்பட்டது. அப்போதே நிறைய மொழிகளில் வெளியிட காரணம் இருந்தது.

முதல் காரணம் இது குழந்தைகளுக்கான படம் இரண்டாவது காரணம் இது இந்தியாவின் முதல் 3டி படம். 3டி என்பது முப்பரிமாணத்தில் தயாரிக்கப்படும் படம் ஆகும். இந்த படத்தை சாதாரண கண்கள் கொண்டு பார்த்தால் இரண்டு இரண்டாக கலர் கலராக தெரியும்.

கண்ணாடி அணிந்து பார்த்தால்தான் நன்றாக தெரியும். அதுவும் பல உருவங்கள் நம் அருகில் இருந்து பேசுவது போலவும் , பறந்து வரும் பொருட்கள் நம் மீது மோதுவது போலவும் தெரியும்.

இப்போது இந்த விசயங்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், முதன் முதலில் இது போல வித்தியாச அனுபவத்தை உணர்ந்த 80ஸ் கிட்ஸ்களுக்கு அது புதிதான பரவசமான விசயம். குழந்தைகளோடு பெரியவர்களும் இந்த படத்தை பார்த்து சிறியவர்களாகி போனதுதான் அதிசயம்.

படத்தின் கதை இதுதான்

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் முக்கியமாக வழிபடப்படும் “சாத்தான்” என்று அழைக்கப்படும் ஒரு தெய்வத்தின் சிறப்புகளின் அடிப்படையில் “குட்டிச்சாத்தான்” என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டது. உலகில் எல்லா இடங்களிலும் கொடூரமான மந்திரவாதிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கரிம்பூதம் (கறுப்பு மந்திரவாதி), அவர் தனது மந்திர மந்திரங்களால் கண்ணுக்கு தெரியாத ஆவியை அடிமைப்படுத்துவார், இரண்டு சிறுவர்களும் ஒரு பெண்ணும் தற்செயலாக குட்டிச்சாத்தானுடன் நட்பு வைத்து அவரை மந்திரவாதியின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் கதை

குட்டிச்சாத்தான் சிறுவர்களுக்கு ஒரு குழந்தையாக மாறி பல மேஜிக் செய்து காட்டுவதும் அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள சின்ன பிரச்சினைகளை தீர்ப்பதும்,
கொடூரமான மந்திரவாதி ஒரு புதையலின் மீது கைகளை வைக்க விரும்புகிறார் .பல கொடுமைகளை செய்யும் மந்திரவாதி குட்டிச்சாத்தானின் உரிமையாளராக இருந்தாலும், அவர் க்ளைமாக்ஸில் சாத்தானால் எரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். குட்டிச்சாத்தான் பின்னர் மட்டையாக மாறி பறந்து செல்கிறான் இதுதான் படக்கதை.

இதை சுவாரஸ்யமாகவும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையிலும் படத்தின் இயக்குனர் இயக்கி இருந்தார்.

இளையராஜாவின் இசையில் வந்த செல்லக்குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே, பூவாடைக்காற்று சுகம் கொண்டு வா போன்ற பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றன.

இந்தியாவின் முதல் 3டி படமான இப்படம் 35 லட்சம் செலவில் எடுக்கப்பட்டு 2 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

மாஸ்டர் சுரேஸ், சூர்யாகிரண், விஜய்,அரவிந்த், வினோத் போன்றவர்கள் குழந்தைகளாக நடித்தனர்.

தமிழுக்கேற்றபடி ஆரூர்தாஸ் வசனம் எழுதி இருந்தார்.

இப்படம் கடந்த 1997ம் ஆண்டு தற்போதைய டிடிஎஸ் சவுண்ட் எபெக்ட்டுடன் ரீ எடிட் செய்து வெளியிடப்பட்டு அப்போதும் வெற்றி பெற்றது.

திரும்பவும் 2010 பிரகாஷ்ராஜ், சந்தானம் நடிக்க சுட்டிச்சாத்தான் என்ற பெயரோடு லேசாக பட்டி டிங்கரிங் பார்த்து மைடியர் குட்டிச்சாத்தானில் இருந்து சில காட்சிகள் உருவப்பட்டு சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது படம்  போணியாகவில்லை.

என்ன இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான் என்று சொல்லும் வகையில் மைடியர் குட்டிச்சாத்தான் படம் இன்றளவும் பேசப்படுகிறது.

Published by
Rohini