ஒரு சில படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வி அடைந்துவிடும். படம் வெளியான பின்னரே என்ன தவறு செய்தோம் என்பது இயக்குனருக்கு தெரியவரும். இப்படி பல அனுபவங்கள் இயக்குனர்களுக்கு ஏற்படும். இந்த வரிசையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் இணைந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா செல்வராகவனிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்து இயக்கம் பற்றி கற்றுக்கொண்டார். அதன்பின் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். ஆனால், இந்த படம் வெற்றி அடையவில்லை. இதுபற்றி சமீபத்தில் விளக்கம் சொன்னார் ஐஸ்வர்யா.
இதையும் படிங்க: வில்லனாக நடிக்கிற ஆளு… கருப்பா வேற இருக்கார்… ரஜினிகாந்துக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்…
அந்த படம் ரசிகர்களிடம் ரீச் ஆகாமல் போனதற்கு காரணமே ‘ஒய் தில் கொலவெறி’ பாடல்தான். அந்த பாடல் பிரபலமாகிவிட்டதால் படத்தில் வைத்துவிட்டோம். படமோ சீரியஸான கதையை கொண்டது. ஆனால், அந்த பாடல் எல்லாவற்றையும் திசை திருப்பிவிட்டது. அந்த பாடலை அந்த படத்தில் வைத்திருக்கக் கூடாது’ என சொல்லி இருந்தார்.
அதேபோல்தான், அவர் இயக்கிய லால்சலாம் படமும் தோல்வி அடைந்திருக்கிறது. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ‘கிரிக்கெட் விளையாட்டில் மதமும், அரசியலும் நுழைவதுதான் படத்தின் கரு. கதை மிகவும் சீரியஸானது. ஆனால், ரஜினி என்கிற நடிகர் வரும்போது கதை அவரின் மீது பயணிக்க துவங்கிவிடுகிறது.
இதையும் படிங்க: ரஜினி என்னை ரூமுக்கு கூப்பிட்டார்!.. போனா சரக்கடிக்க சொன்னார்!.. காமெடி நடிகர் பேட்டி!..
நாங்கள் என்ன சீரியஸான கதை சொன்னாலும் அதைவிட்டு விட்டு ரஜினியையே எல்லோரும் பார்க்கிறார்கள். என்ன செய்தும் எங்களால் அதை தடுக்கமுடியவில்லை. அதனால்தான் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. நாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்பதே ரசிகர்களுக்கு ரீச் ஆகவில்லை. அவர்கள் அதை புரிந்துகொள்ளவும் இல்லை.
எனவே, அப்பாவை வைத்து படம் எடுத்தால் அவரை மட்டுமே சுற்றி நடப்பது போல மட்டுமே காட்சிகளை அமைக்க வேண்டும் என்பதை நான் லால் சலாம் படத்தில் கற்றுக்கொண்டேன். ஏற்கனவே படத்தில் சில முக்கிய காட்சிகள் கொண்ட ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. இருந்ததை வைத்து எடிட்டிங் செய்து படத்தை வெளியிட்டோம் என ஐஸ்வர்யா சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
