பரியேறும் பெருமாள் படத்தில் என் கணவர்தான் நடிச்சிருக்கணும்… பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்!
Pariyerum perumal: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்த பரியேறும் பெருமாள் பரியன் கேரக்டரில் என்னுடைய கணவர் தான் நடித்திருக்க வேண்டும் என நடிகை ஒருவர் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது.
2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை பா ரஞ்சித் தயாரித்திருந்தார். கதிர், நந்தினி, யோகி பாபு, ஜி மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். ஜாதி பாகு பாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட விஜய் பட பிரபலம்… தொடங்கியது வேட்டை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பு செய்திருந்த இப்படம் வெளியாகி பல விருதுகளை அள்ளிகுவித்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைக் பெற்றது. மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தப்பட்ட இயக்குனராக மாறினார்.
தற்போது இப்படத்தில் பதியனாக என்னுடைய கணவரும், ஆனந்தி நடித்த கேரக்டரில் நானும் தான் நடித்திருக்க வேண்டும் என நடிகை மேகா ஆகாஷ் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, விஷ்ணுவும் நானும் தான் பரியேறும் பெருமாள் ஜோடியாக நடித்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: மணிமேகலை சொல்றது உண்மைதான்… சக ஆங்கர் ரக்ஷன் சொல்வது என்ன?
ஆனால் விஷ்ணுவால் அப்போது நடிக்க முடியவில்லை. எனக்கும் கால்சீட் ஒதுக்குவதில் பிரச்சனை இருந்தது. இதனால் எங்களால் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்திருக்கிறார். தமிழில் சில படங்கள் மட்டுமே எடுத்திருக்கும் மேகா ஆகாஷ், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருந்தார்.
அப்படம் வெளியாகி சில நாட்களில் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டார். நிச்சய புகைப்படங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அவர் அதிர்ச்சியை கொடுக்க அதற்கு பல பின்னணி தகவல்கள் கூறப்பட்டது. பின்னர் சமீபத்தில் சத்தமே இல்லாமல் தங்களுடைய திருமணத்தையும் முடித்து இருக்கின்றனர். இவருடைய கணவர் பிரபல அரசியல்வாதி திருநாவுக்கரசுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.