என் புருஷனுக்கு அந்த உணர்வு அதிகமாக இருக்க வேண்டும்... அடம் பிடிக்கும் செல்லக்குட்டி ஜான்வி கபூர்...
தயாரிப்பாளர் போனி கபூர் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகள் ஜானகி கபூர். இவர் பாலிவுட்டில் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் எடுத்து வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் பல அட்டகாசமான கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது . இவர் தற்போது தமிழில் மிக்ப்பெரிய வெற்றிப்பெற்ற கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.
"குட் லக் சகி" என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தபடம் ஜூலை 29 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், நடிகை ஜான்வி கபூர் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது கரண் அவரிடம் உங்களின் வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன்- தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ஆர்யா… இப்படியே போனால் கேரியர் அவ்ளோதான்!….
அதற்கு பதில் அளித்த ஜான்வி கபூர் " எனக்கு கணவராக வர வேண்டியவர் மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும். அவர் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும். எப்படி பட்ட சூழ்நிலைகளிலும் அவர் என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு தெரியாத பல விஷியங்கள் அவருக்கு தெரிந்திருக்கனும். நான் அவரிடம் இருந்து நிறையவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக அவரிடம் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்க வேண்டும் என லிஸ்ட் போட்டு கூறியுள்ளார்.