Connect with us
sivaji

Cinema News

‘பார்க்கிங்’ படத்தில் அந்த சீன்! சிவாஜி இல்லைனா அத செஞ்சிருக்க முடியாது – பாஸ்கர் சொன்ன சீக்ரெட்

MS Baskar: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். ஏராளமான ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார் பாஸ்கர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகளை பேசக் கூடிய ஒரு ஆகச்சிறந்த கலைஞர்தான் எம்.எஸ்.பாஸ்கர். ஒவ்வொரு மொழிக்கேற்ப அவரின் உடல் பாவனைகளையும் மாற்றி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

இதையும் படிங்க: பாத்தவுடனே ஜூமிங்தான்!.. டிரான்ஸ்பரெண்ட் உடையில் சூடேத்தும் தளபதி 68 பட நடிகை..

இத்தனை மொழிகளை பேசியும் மற்ற மொழிப் படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வரவில்லை என்று பாஸ்கர் கூறுகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார் பாஸ்கர்.

அதுதான் சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம். ஆரம்பகாலத்தில் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு மனிதர் எப்படி இருப்பார்?  எப்படி நடந்து கொள்வார் என்பதை போல் காட்டிவிட்டு திடீரென வில்லனாக மாறுவார் பாஸ்கர்.

இதையும் படிங்க: அவர் கேப்டன்தான்! ஆனால் எனக்கு அம்மா – விஜயகாந்த் செய்த உதவியை நினைத்து கண்கலங்கிய பிரபலம்

இதை யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஹரீஸ் கல்யாணை பாட்டிலால் ஓங்கி அறையும் காட்சியில் அசத்தியிருப்பார். அப்போது ஒரு சீனில் ஹரீஸ் கல்யாணை கண்ணிமைக்காமல் சில நேரம் பார்த்துக் கொண்டே இருப்பார் பாஸ்கர். அந்த சீனுக்காக சில நாள்கள் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.

கண்ணிமைக்காமல் பார்க்கும் போது கண்ணிலிருந்து நீர் வடியும். அப்படி வடியாமலும் கண்ணை இமைக்காமலும் இருக்க வேண்டும். அதற்காகவே பயிற்சி எடுத்தாராம். இதையெல்லாம் தாண்டி இப்படி ஒரு காட்சியில் தான் சிவாஜி திருவிளையாடல் படத்தில் நடித்திருப்பார் என்றும் பாஸ்கர் கூறினார்.

இதையும் படிங்க: முகத்தை திருப்பிக்கொண்ட பிரபல நடிகர்..! அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்து லைக் வாங்க வைத்த சிவாஜி..!

அதாவது திருவிளையாடல் படத்தில் சிவனாக நடித்திருக்கும் சிவாஜி சிவனின் கண் மூடினால் இந்த அகிலமே அழியும் என்பது ஐதீகம் என்பதை கருத்தில் கொண்டு சிவாஜியும் கண்ணிமைக்காமல் நடித்திருப்பாராம். என் அப்பாவாகிய சிவாஜியே அப்படி நடித்திருக்கும் போது அவருடைய மகன் நான். என்னால் முடியாதா என்ன? என்றே கடும் பயிற்சி எடுத்து நடித்தாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top