ரஜினியுடன் நடிச்சப்ப ஒன்னும் நடக்கலை… விஜயுடன் வேற மாதிரி ஆச்சு… ஓபனாக உடைத்த பிரபல நடிகை!..

by Akhilan |   ( Updated:2024-08-13 07:17:00  )
ரஜினியுடன் நடிச்சப்ப ஒன்னும் நடக்கலை… விஜயுடன் வேற மாதிரி ஆச்சு… ஓபனாக உடைத்த பிரபல நடிகை!..
X

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜயுடன் இணைந்து நடிப்பது நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் ஆசையாக இருக்கிறது. இதில் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு அமையும். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: சூரிக்கு இது ஒரு ஆடுகளம்!.. விருது நிச்சயம்!.. கொட்டுக்காளி டிரெய்லர் வீடியோ…

மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இதில் முதல் படம் ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து, விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் அவருடன் ஜோடி போட்டார். இந்நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து இருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் மாளவிகா மோகனின் பழைய பேட்டிகள் வைரலாக தொடங்கி இருக்கிறது.

அப்பேட்டியில் மாளவிகா பேசும்போது, நான் தமிழ் கேரியரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் தான் விஜயை சந்தித்தேன். என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படமான மாஸ்டரில் தான் நாங்கள் சந்தித்து கொண்டோம். அந்த படத்தினை நான் ஒப்புக்கொண்டதுக்கு அவரும் ஒரு காரணமாக இருந்தார்.

அவர் என்னை பார்க்கும் போது எப்போதுமே என்னை பாராட்டுவார். உங்களுக்கு தென்னிந்திய முகமாக இருக்கிறது. அழகா இருக்கீங்க. நீங்க தமிழுக்கு பெரிய இடத்துக்கு வருவீங்க எனவும் என்னை சப்போர்ட் செய்ய சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு படத்தில் வேலை செய்த நான்கு மாதங்களும் பாசிட்டிவாகவே இருக்கும்.

இதையும் படிங்க: டிஆர்பியில் டாப்ஹிட் சீரியலுக்கு மூடுவிழா வைத்த சன் டிவி… ஷாக்கான ரசிகர்கள்

அவர்கள் சொன்னதை நம்ப தொடங்கி அதையே ஏற்றுக்கொண்டேன். நான் இதுக்கு சரியான ஆள் என்று நம்ப முடிந்தது. ஏனெனில் நான் பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தாலும் அது துணை கதாபாத்திரம் தான். என்னுடைய இடத்தினை தேடிக்கொண்டு இருந்தேன். வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தளபதியுடன் நடித்த பின்னர் என்னுடைய கேரியரே மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story